மக்களை நேரடியாக சந்திக்க வரும் முதலமைச்சர்!! மாஸ் காட்டும் தமிழக முதல்வர்!!
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பல அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பல சினிமா நடிகர்களும் பங்கேற்றனர். சில மாதங்களாக நடைபெற்ற பிரச்சாரத்தில் அவரவர் கட்சிக்காக பலர் நூதன முறையிலும், பலர் வேடிக்கையான முறையிலும், பலர் மக்களுக்கு பரிசுப் பொருட்களைக் கொடுத்தும் மக்களை கவர்ந்து தங்களது வாக்குகளைச் சேகரிக்கும் முறையில் ஈடுபட்டனர்.
அதில் திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடத்திய பிரச்சாரத்தின் போது தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் நேரடியாகச் சென்று மக்களின் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கினார். மேலும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் மக்களின் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தார். மேலும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்தே அவர் கூறியவாறு அனைத்து திட்டங்களையும் அமல்படுத்தி வருகிறார். மேலும் அவரின் பணியை சரியாக செய்து வருகிறார். தற்போது அவர் சொன்னதுபோலவே ஆட்சிக்கு வந்தவுடன் உங்கள் தொகுதியின் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளார். இதன் முதற்க்கட்ட முயற்ச்சியாக தலைமை செயலகத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற உள்ளதாக அறிவித்துள்ளார். இதன்படி இன்று காலை தலைமைச் செயலகத்தில் நேரடியாகவே மக்களிடமிருந்து மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதன் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.