Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட மூதாட்டி! உடனடியாக கண்டனம் தெரிவித்த முதலமைச்சர்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் விற்பனை செய்யும் பெண்ணை பேருந்திலிருந்து இறங்கி விடப்பட்டார் அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருக்கின்றார், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியங்குடியைச் சார்ந்தவர் செவ்வமேரி இவர் மீன் விற்பனை செய்து வருகின்றார், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல மீன் விற்பனை செய்து விட்டு தன்னுடைய வீட்டிற்கு செல்வதற்காக குளச்சல் பேருந்து நிலையத்தில் நாகர்கோவிலிலிருந்து குடிமனை செல்லும் பேருந்தில் ஏறி இருக்கிறார். அப்போது மீன் விற்று விட்டு வருகிறாயா இறங்கு, இறங்கு, நாறும் என்று கூறி நடத்துனர் செவ்வமேரியை பேருந்தில் இருந்து இறக்கி விட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக மூதாட்டி குளைச்சல் பேருந்து நிலையத்தில் இருந்த நேரக் காப்பாளர் ஜெயக்குமார் இடம் புகார் வழங்கியிருக்கிறார். ஆனால் அவரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. மீன் நாறுகிறது என்று தெரிவித்து பேருந்தில் ஏறிய பெண்மணியை இறக்கி விடுவது என்ன நியாயம்? நான் எப்படி வாணியங்குடிக்கு நடந்து செல்வேன் என்று மூதாட்டி செவ்வமேரி ஆதங்கத்துடன் கதறி கண்ணீர் விட்டு அழும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனைத் தொடர்ந்து மூதாட்டி செவ்வமேரியை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட ஓட்டுநர் மைக்கேல் மற்றும் நடத்துனர் மணிகண்டன் மற்றும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நேரக் காப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அரவிந்த் உத்தரவிட்டிருக்கிறார்.

இதற்கு நடுவில் இதுதொடர்பாக தகவல் அறிந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய வலைதள பக்கத்தில் குமரி மாவட்டத்தில் மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரை பேருந்து நடத்துனர் இறங்கி விட்டதாக தெரிவிக்கப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. மகளிர் மேம்பாட்டிற்காக கட்டணமில்லாத சீட்டை வழங்கி அதனை நடத்துனர்கள் திறம்பட செயல்படுத்தி வரும் இந்த காலத்தில் ஒரு நடத்துனரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது ஆக இருக்கிறது. அனைவரும் சமம் என்ற நோக்கத்துடன் நம் அனைவருடைய எண்ணமும், செயலும் அமையவேண்டும் என்று பதிவிட்டு இருக்கிறார்.

அதேபோல இது தொடர்பான தகவல் அறிந்ததும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தன்னுடைய வலைதள பக்கத்தில் குமரி மாவட்டம் குளச்சல் பேருந்து நிலையத்தில் மூதாட்டி ஒருவர் பேருந்தில் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்டவர்களால் இறக்கிவிடப்பட்டதாக வெளியான செய்தி அறிந்து உடனடியாக போக்குவரத்து துறை அலுவலர்களிடம் தகுந்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்திய தன் பெயரில் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழக போக்குவரத்துத் துறையின் குமரி மாவட்ட துணை இயக்குனர் (இயக்கம் மற்றும் ஆய்வு) மூதாட்டியை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதனடிப்படையில் அதிகாரி மூதாட்டியை நேரில் சென்று விசாரித்து சம்பந்தப்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார். அப்போது அந்த மூதாட்டி அவர்களுக்கு தண்டனை எல்லாம் கொடுக்காதீங்க தெரியாமல் செய்து விட்டார்கள் என்னுடைய மகன்களை போன்றதுதான் அவர்களும் ஆனால் என்னைப் போன்று மற்றவர்கள் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

Exit mobile version