அப்பாடா ஒரு வழியா இன்னிக்காவது அங்க போக முடிஞ்சதே! முதல்வர் நிம்மதி பெருமூச்சு!

0
128

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் சம்பந்தமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கன்னியாகுமரியில் இன்று ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறார்.

கொரோனா தொற்று காரணமாக பல தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைகள் காரணமாக தமிழ்நாட்டில் தொற்று குறைய தொடங்கி இருக்கின்றது.

இதற்கு இடையில் மாவட்ட வாரியாக நேரில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்து வருகின்றார்.

இதுவரை 20க்கும் அதிகமான மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்ததுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி இருக்கின்றார்.

இந்த நிலையில். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் சம்பந்தமாக கன்னியாகுமரியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த ஆய்வை மேற்கொள்ள இருக்கின்றார். அதன்பின்பு அங்கே முதல்வர் பழனிசாமி பல நலத்திட்ட உதவிகளை வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதற்காகவே சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் முதல்வர், அங்கிருந்து சாலை வழியாக நாகர்கோயில் புறப்படுகிறார்.

அங்கு பிற்பகல் சுமார் மூன்று மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் முதல்வர், கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றார்.

முதல்வரின் வருகையை அடுத்து விருந்தினர் மாளிகை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது.