Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை! ஆலோசனை கூட்டத்திற்கான காரணம்?

இன்று அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை!ஆலோசனை கூட்டத்திற்கான காரணம்?

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துணை முதல்வர் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் மூன்றாம் வாரத்திலிருந்து தொடங்கும் என்று வானிலை ஆய்வாளர்களால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது.இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் ஏரி, குளங்கள்,தூர்வாருதல் குறித்தும் மழைவெள்ளத்தை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் காலை 10 மணி அளவில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்,அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

Exit mobile version