ஈ – பாஸ் எப்போது நிறுத்தப்படும் என்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

0
114

கொரோனாவினால் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கு ஈ பாஸ் கட்டாயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநில மாவட்டங்களுக்கு இடையேயான எல்லைகளுக்குள் செல்ல இ பாஸ் அவசியமாக இருக்கிறது.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக்குப் பிறகு முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் சுற்றுச்சூழல் தாக்க வரைவு, புதிய கல்வி கொள்கை ஆகியவற்றின் முடிவுகளை எடுக்க சிறப்பு வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினரின் ஆய்வுகளுக்கு பிறகு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

பிறகு இ பாஸ் நிறுத்துவது தொடர்பாக பேசிய முதலமைச்சர், கொரனோ தாக்கம் முழுமையாக குறைந்த பின்பு இ பாஸ் ரத்து செய்யப்படும் எனவும், இ பாஸ் வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி எளிய முறையில் வழங்குவது குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.