Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சேலம் அரசு மருத்துவமனையின்  கொரோனா பிரிவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Chief Minister Edappadi Palanisamy has been admitted to the Corona ward of the Salem Government Hospital.

Chief Minister Edappadi Palanisamy has been admitted to the Corona ward of the Salem Government Hospital.

சேலம் அரசு மருத்துவமனையின்  கொரோனா பிரிவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் பீதியில் இருந்தனர். கடந்த சில மாதங்களாக ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. பின்னர் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைய தொடங்கியதால் ஊரடங்கு உத்தரவில் சிறிய தளர்வுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வழக்கம் போல தங்கள் பணியில் ஈடுபட்டதால் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

இந்திய உட்பட பல நாடுகளில் கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் பொதுமக்கள், பொது இடங்களுக்குச் சொல்லும் போது தனிநபர் இடைவெளி பின்பற்றுதல், அடிக்கடி கைகளைக்  கழுவுதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து தங்களது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிலர் இதை பின்பற்றாததால் தற்போது மக்களிடையே கொரோனா வைரஸ் இரண்டாவது அலை  அதித்தீவிறமாக பரவி வருகிறது

இந்த 2 ஆம் அலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ள நிலையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மதிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது தீவிரமடைந்துள்ளது. கடந்த மாதம் 1 ஆம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மற்றும் பிரதமர் மோடி அவர்களும் தங்களின் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்ஸினை எடுத்துக்கொண்டனர். இந்த நிலையில் நான்கு வாரம் முடிந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேற்றிரவு சேலம் அரசு மருத்துவமனையில் அமைந்துள்ள கொரோனா பிரிவிற்கு சென்று தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்ஸினை எடுத்துக்கொண்டார்.

Exit mobile version