Breaking: படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்த விபத்து – முதல்வர் விளக்கம்

0
233
#image_title

Breaking: படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்த விபத்து – முதல்வர் விளக்கம்

“இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்.இந்தூர் கோவிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்த விபத்து குறித்து மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் கருத்து தெரிவித்துள்ளார்.

#image_title

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் அமைந்துள்ள பெலேஷ்வர் மகாதேவ் கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்ததில் பக்தர்கள் கிணற்றில் விழுந்தனர். ராம நவமி நாளை முன்னிட்டு சிறப்பு பூஜையில் ஈடுபட்டுருந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்தது

தற்போது வரை , இரண்டு குழந்தைகள் உட்பட 10 பக்தர்கள் இதுவரை மீட்கப்பட்டனர்.பொதுமக்களின் உதவியுடன் காவல்துறை விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயற்சித்து வருகிறது.

இந்த விபத்தை அடுத்து மீட்பு பணியை துரிதப்படுத்த இந்தூர் கலெக்டர் மற்றும் இந்தூர் ஆணையருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்

 

மேலும் இந்தூர் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும் முதல்வரின் அலுவுலகம் தெரிவித்துள்ளது.இது குறித்து அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் கூறுகையில் , “இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்.10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்,மீதமுள்ள 9 பேரை மீட்க்கும் முயற்சி நடந்து வருகிறது” என தெரிவித்துள்ளார்