Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மறைவாட்ட பொன் விழாவுக்கு தமிழக முதல்வர் அழைத்தால் தமிழக பாஜகவில் இணைந்து விடுவோம்-கிறிஸ்தவ பாதிரியார் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவல்!!

International Women's Day yesterday! CM Stalin's speech!

International Women's Day yesterday! CM Stalin's speech!

மறைவாட்ட பொன் விழாவுக்கு தமிழக முதல்வர் அழைத்தால் தமிழக பாஜகவில் இணைந்து விடுவோம்-கிறிஸ்தவ பாதிரியார் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவல்!!

தூத்துக்குடி கத்தோலிக்க மறைவாட்ட பொன் விழாவுக்கு தமிழக முதல்வரை அழைத்தால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்து விடுவோம் என கிறிஸ்தவ பாதிரியார் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தில் பாதிரியாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அமலதால். இவர், தற்போது தூத்துக்குடி இன்னாசியார்புரத்தில் உள்ள பாதிரியார்கள் ஓய்வு இல்லத்தில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் பாதிரியார் பேசி வெளியிட்ட வீடியோ ஒன்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பாதிரியார் அமலதாஸ் பேசி இருப்பதாவது.

மதுக்கடைகளை மூடுவோம் என தேர்தல் நேரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஆனால், மூடவில்லை, மாறாக கூடுதல் மதுக்கடைகளை திறக்கின்றனர். எனவே, அவர் பொறுப்பான முதல்வராக இல்லை.

புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என பாஜகவும், நாம் தமிழர் கட்சியும் கோரிக்கை விடுத்தன. ஆனால் மதுக்கடைகளை மூட முதல்வர் மறுத்துவிட்டார்.

அதுமட்டுமல்ல கிறிஸ்தவ சிறுபான்மை பள்ளிகளுக்கான சலுகைகளை படிப்படியாக குறைத்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி மறை மாவட்ட பொன் விழாவுக்கு அவரை அழைப்பதாக அறிகிறோம்.

அவ்வாறு முதல்வர் ஸ்டாலினை அழைத்தால் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர் போன்ற அனைத்து கட்சியினரையும் அழைக்க வேண்டும். இல்லையென்றால் ஆயர் அவர்களே நீங்கள் ஒரு கட்சி சார்புடையவராக செயல்படுகிறீர்கள் என்று பொருள்.

அவ்வாறு ஸ்டாலினை அழைத்து ஆன்மீக விழாவை நடத்த வேண்டாம். அப்படித்தான் நடத்துவோம் என உறுதியாக இருந்தால், கிறிஸ்தவர்களும் உங்களுக்கு தலையாட்டி பொம்மைகளாக இருந்தால், அப்படிப்பட்ட கிறிஸ்தவர்களை நம்புவதை விட பாஜகவை நம்புவதே மேல் என முடிவு செய்து குருக்களில் கொள்கை உறுதி படைத்த நாங்கள் பொன் விழா நேரத்திலேயே அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைவோம் என்பதை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறேன் என அந்த வீடியோவில் பாதிரியார் பேசி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version