Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல்வரை நெகிழ வைத்த சிறுவன்! வியந்து போன உதயநிதி ஸ்டாலின்!

தமிழக முதலமைச்சராக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு அறிவித்து செய்து வருகின்றார். அதேபோல் அவருடைய தொகுதியான கொளத்தூர் தொகுதியில் உள்ள குறை நிறைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்து வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதே நேரம் ஒருசில நற்காரியங்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்ட தவறியதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

அந்த விதத்தில் கொளத்தூரை சார்ந்த மருத்துவர் பார்த்தசாரதி, மருத்துவர் கலையரசி, தம்பதியரின் 5 வயது மகன் சாய் சித்தார்த் என்பவர் 928 கலர் கியூபை வைத்து முதல்வர் ஸ்டாலினின் உருவப்படத்தை வரைந்திருக்கிறார்.

இதன் காரணமாக, நெகிழ்ச்சி அடைந்த முதலமைச்சர் ஸ்டாலின் இந்த காரியத்தை செய்த சிறுவன் சாய் சித்தார்த் மற்றும் அவருடைய தாய் தந்தையரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்ததுடன் அந்த சிறுவனுக்கு பெரியார் சிலை ஒன்றையும் பரிசாக வழங்கி இருக்கின்றார். இந்த சம்பவம் நடைபெற்ற சமயத்தில் திமுகவின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை உறுப்பினரும் முதலமைச்சர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் உடனிருந்து இருக்கின்றார்.

Exit mobile version