Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிர்ச்சி! இந்த பொருட்களின் விலையெல்லாம் உயரப்போகுது!

மத்திய நிதி அமைச்சர் நர்மலா சீதாராமன் தலைமையில் ஜி எஸ் டி கவுன்சிலிங் 47வது கூட்டம் சண்டிகரில் நடந்தது. இதில் பல பொருட்கள் மீதான வரியை உயர்த்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. எல்இடி விளக்குகள், பேனா மை, கத்தி, பிளேடு, உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டி வரியை அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த ஜிஎஸ்டி கூட்டத்தின் முடிவில் ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடைபெறும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

முன்னதாக தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மதுரையில் நடத்துவதற்கு முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில், மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்த மத்திய நிதியமைச்சர் நர்மலா சீதாராமனுக்கு சமூக வலைதளம் மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்திருக்கிறார்.

 

எங்களுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டு மதுரையின் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை நடத்துவதற்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு நன்றி என தெரிவித்திருக்கிறார்.

மேலும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு வருகை தரும் மாநில அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை கோவில் நகரம் மற்றும் அதன் மக்கள் அன்புடன் வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Exit mobile version