இனி இது போன்ற துயர சம்பவங்கள் நடக்க கூடாது! மத்திய வெளியுறவுத் துறைக்கு கோரிக்கை வைத்த முதலமைச்சர்!

0
111

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த சமயத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்தது அதில் இருந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சொல்லமுடியாத துயரங்களை சந்தித்து வருகிறார்கள். இது காலம் காலமாக முடியாத தொடர்கதையாக தொடர்ந்து வருகிறது.

மீனவர்கள் தாக்கப்படுவதும், கைதுசெய்யப்படுவதும் அவர்களுடைய உடமைகள் சேதப்படுத்தபடுவது, போன்ற அட்டூழியங்களை இலங்கை கடற்படை மிகவும் தைரியமாக செய்து வருகிறது.

இதுதொடர்பாக மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு பல கோரிக்கைகளை முன்வைத்தும் அதனை மத்திய, மாநில அரசுகள் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது. இதனால் பல மீனவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் சொல்லிமாலாது.

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த சமயத்தில்தான் இவ்வாறான கொடுமைகள் நடந்து வந்தன என்றால் தற்சமயம் பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்தும் மீனவர்களுக்கான கொடுமை தற்போதும் நடைபெற்று வருகிறது. அந்த கொடுமைகளை தடுத்து நிறுத்துவதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பது தமிழக மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் தமிழக மீனவர்கள் கப்பலை இலங்கை கடற்படையினர் விரட்டி அடிக்கும் முயற்சியில் சமீபத்தில் முழுகிப் போன கப்பலில் காணாமல் போன மீனவரை உடனடியாக கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

இது குறித்து தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் தமிழக மீனவர்களை விரட்டி பிடிக்க முயற்சி செய்த போது மூழ்கிப்போன கப்பலில் காணாமல் போன மீனவரை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு இன்று கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் அதில் தெரிவித்திருப்பதாவது சென்ற 18ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடி கப்பலை இலங்கை கடற்படையினர் துரத்தி வந்தபோது மூழ்கியது அதிலிருந்த மூன்று மீனவர்களில் 2 மீனவர்கள் காப்பாற்றப்பட்ட சூழ்நிலையில், மீதம் இருக்கக்கூடிய ஒரு மீனவரை தேடும் பணி கடந்த 18ஆம் தேதி முதல் நடந்து வருகிறது என குறிப்பிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

மீட்கப்பட்ட மீனவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்து விடவும், காணாமல் போன மீனவரை கண்டுபிடித்து விடவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதோடு தன்னுடைய கடிதத்தில் இதுபோன்ற பல சம்பவங்கள் நீண்ட காலமாக தொடர்ந்து நடந்து வருவதால் இந்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காண போதுமான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.