Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை

DMK MK Stalin-Latest Tamil News

DMK MK Stalin-Latest Tamil News

தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துத்துறை அரசு செயலாளர்களுடன் இன்று காலை 10 மணிக்கு விரிவான ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனையின் போது ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் நிலை தற்போது எந்த அளவில் உள்ளது? தற்போது செயல்படுத்தப்பட்டு வரக்கூடிய திட்டங்கள் அனைத்தும் எப்போது முடிவடையும் என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் துறை வாரியான திட்டப்பணிகள், வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் அவர் விரிவான ஆய்வு நடத்த உள்ளார். குறிப்பாக அடுத்த மாதம் வடகிழக்கு பருவ மழை தொடங்க இருக்கும் நிலையில் அதற்குள் செய்து முடிக்க வேண்டிய பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.

மேலும் மழை நீர் வடிகால் பணிகள், கால்வாய் தூர் வாருதல் பணிகள் குறித்தும் இதில் ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த ஆலோசனையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.

Exit mobile version