நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றது. சுதந்திர தினத்தை கொண்டாடும் விதத்தில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறது. அதோடு சமூக வலைதளங்களில் முகப்பு படத்தில் தேசிய கொடியை வைக்க வேண்டும் எனவும், பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
ஆகஸ்ட் 15-ஆம் நாளன்று மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 1974-ஆம் ஆண்டு பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்!
#NewProfilePic pic.twitter.com/mWgAtmbQ9L
— M.K.Stalin (@mkstalin) August 4, 2022
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் முகப்பு படத்தை மாற்றியிருக்கிறார். அதில் தமிழக சட்டமன்றத்தில் தேசிய கொடி ஏற்றும் கொடி மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நிற்பதை போன்ற புகைப்படம் இருக்கிறது.
அதாவது சுதந்திர தினத்தன்று மாநில ஆளுநர்களின்றி முதலமைச்சரே தேசிய கொடியை ஏற்றும் விதத்தில் உரிமையை பெற்றுத் தந்தவர் எனவும், அந்த கொடியை ஏற்றி வைத்த நிகழ்ச்சியையும் கொண்ட புகைப்படத்தை அவர் வைத்திருக்கிறார்.
இது குறித்தான புகைப்படத்துடன் தன்னுடைய வலைதள பதிவில் பதிவிட்டிருக்கின்ற முதலமைச்சர் ஸ்டாலின் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் அன்று மாநில முதலமைச்சர்கள் கொடி ஏற்றும் உரிமையை 1974 ஆம் வருடம் பெற்றுக் கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.