Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாணவியின் கனவை நிறைவேற்றிய முதல்வர் முக.ஸ்டாலின்!!! மேலும் மாணவியின் கனவு நினைவாக வேண்டும் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவு!!!

மாணவியின் கனவை நிறைவேற்றிய முதல்வர் முக.ஸ்டாலின்!!! மேலும் மாணவியின் கனவு நினைவாக வேண்டும் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவு!!!

மும்பையில் தன்னை சந்திக்க வேண்டும் என்று விரும்பிய பிரனுஷ்கா என்ற மாணவியின் விருப்பத்தை நிறைவேற்ற தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் மாணவி பிரனுஷ்கா அவர்களை நேரில் சந்தித்து அவரது விருப்பதை நிறைவேற்றியதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மும்பூ வரும் உங்களை நான் உங்களை சந்திக்க வேண்டும். நான் உங்களுடைய மிகப் பெரிய ரசிகை என்று சமூக வலைதளம் மூலமாக மாணவி பிரனுஷ்கா அவர்கள் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கூ வைத்திருந்தார். அதன்படி மாணவி பிரனுஷ்கா அவர்களை முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து அவருடைய விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார்.

மும்பையில் நடைபெறும் எதிர்கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் மும்பைக்கு வந்தார். இந்நிலையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் மாணவி பிரனுஷ்கா அவர்களை சந்தித்தது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மாணவி பிரனுஷ்கா அவர்களை சந்தித்தத முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அந்த மாணவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் மாணவி பிரனுஷ்கா அவர்களின் ஐ.ஏ.எஸ் கனவு நிறைவேற வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு குறித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் “மும்பையில், இந்த பிரகாசமான மற்றும் இரக்கமுள்ள பெண் பிரனுஷ்கா என்னை சந்திக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றினேன்.

மணிப்பூரில் நடந்த வன்முறை அவளைப் போன்ற ஒரு பள்ளிச் சிறுமியைக் கூட எப்படிப் பாதித்திருக்கிறது என்பதைப் பார்ப்பது எனக்கு வேதனை அளிக்கிறது.  நீடித்த அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக உழைக்க அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு தெளிவான நினைவூட்டல். ஐஏஎஸ் அதிகாரியாகும் பிரனுஷ்காவின் கனவு நனவாக வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

 

Exit mobile version