இன்று முதல் 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விரும்பும் நபர்களுக்கு விருப்பமனு விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பின்படி சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோர் விருப்பத்தை ஆரம்பித்து வைத்தார்கள். இன்று முதல் மார்ச் மாதம் 5-ஆம் தேதி வரையில் அனுதினமும் மாலை 5 மணி வரையில் விருப்ப மனுக்களை வாங்கிக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் போட்டியிட ரூபாய் 15,000 செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல பாண்டிச்சேரியில் போட்டியிடுவதற்கான விருப்பங்கள் பெறுவதற்கு சந்தா தொகையாக ரூபாய் 5 ஆயிரம் ,அதோடு கேரளா மாநிலத்தில் போட்டியிடுவதற்கு விருப்பம் பெறுவதற்காக சந்தா தொகையாக ரூபாய் இரண்டாயிரம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல எதிர்க் கட்சியான திமுக பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வரையில் விருப்ப மனு கொடுக்கலாம் என்று அவகாசத்தை நீட்டிப்பு செய்து இருக்கிறது. தேமுதிக பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி முதல் மார்ச் மாதம் மூன்றாம் தேதி வரையில் விருப்ப மனு கொடுக்கலாம் என்று தெரிவித்திருக்கிறது.
எதிர் வரும் சட்டசபை தேர்தலில் மறுபடியும் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடுகின்றார்.
அதேபோல போடிநாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அதேபோல திண்டுக்கல் தொகுதியில் திண்டுக்கல் சீனிவாசன், கோபியில் செங்கோட்டையன், குமாரபாளையத்தில் தங்கமணி, தொண்டாமுத்தூரில் வேலுமணி ,போன்றோர் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறார்கள்.