[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக பல தீர்மானங்களை தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றி வருகிறார். அடுத்த மாநிலங்கள் அனைத்தும் வியந்து பார்க்கும் விதமாக நிறைவேற்றப்பட்டு இருக்கும் ஒரு சில தீர்மானங்கள் தொடர்பாக சிறிய தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கின்ற ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதைத்தான் தமிழக அரசு ஆரம்பம் முதலே தெரிவித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் அந்த ஏழு பேர் விடுதலைக்காக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பது தமிழகத்தில் எல்லோரும் அறிந்ததுதான்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கை விட ஒருபடி மேலே சென்று அந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவையில் செல்வ 2018 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார். அதை நிறைவேற்றி மட்டும் இல்லாமல் அதனை தமிழக ஆளுநருக்கு அனுப்பி அவரை ஒப்புதல் தரச்சொல்லி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
அதேபோல தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே இருந்து வந்த காவிரி நீர் பிரச்சினையில் சுமுகமான முடிவை எட்டும் நோக்கத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று சென்ற 2018 ஆம் வருடம் மார்ச் மாதம் 15ஆம் தேதி தமிழக அரசு சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த வருடத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் காவிரி மேலாண்மை வாரியத்தையும் தீர்மானத்தை முன்மொழிய செய்தார். அதன்படியே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் பெயரில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்திருப்பது இதன் வழியாக 50 வருடங்களுக்கு மேலாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே இருந்து வந்த காவிரி நதிநீர் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது அதற்கு காரணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று நீர் மேலாண்மை வலிமர்கள் முதல்வரை பாராட்டி இருக்கிறார்கள்.
அதேபோல கடந்த 2012ம் வருடத்தில் கர்நாடக மாநில அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு தீவிரமான முயற்சியை மேற்கொண்டது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சிறப்புக் கூட்டத்தில் கர்நாடகாவிற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உச்சநீதிமன்ற தீர்ப்பில் போது குறிப்பிட்டபடி முன் அனுமதி இல்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த இயலாது என்பதையும் மீறி கர்நாடக மாநில அரசு செயல்படுவதற்கு முயற்சி செய்ததற்கு கடுமையாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு மத்திய அரசு கொண்டு வந்த அணை பாதுகாப்பு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு 2018 ஆம் வருடம் ஜூன் மாதம் 26ஆம் தேதி தமிழக அரசு அதற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. மாநிலங்களிடம் பேசாமல் எப்படி மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற முடியும் என்று தமிழக அரசு சார்பாக மத்திய அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதேபோல காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்பட விடாமல் தடுப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தார் இதன் மூலம் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா பகுதிகள் அழிவிலிருந்து தடுக்கப்பட்டது.