ஒன்றிய அரசை நேரடியாக சந்திக்கும் தமிழக முதல்வர்! மேகதாதுவின் உச்சக்கட்ட பரபரப்பு!

0
118
Chief Minister of Tamil Nadu to meet the Union Government directly! The climax of the cloud!

ஒன்றிய அரசை நேரடியாக சந்திக்கும் தமிழக முதல்வர்! மேகதாதுவின் உச்சக்கட்ட பரபரப்பு!

இந்த வருடம் தமிழ்நாடு பல பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறது.அந்தவகையில் கொரோனா தொற்றின் ஆபத்து ஒன்று என்றால் இரண்டாவதாக இருப்பது இந்த மேகதாது அணை நிலவரம் தான்.ஏனென்றால் மேகாதாது அணை கட்டப்பட்டால் விவசாயிகளுக்கு தண்ணீர் இன்றி பெருமளவு சிரமத்திற்குள்ளாகுவார்கள்.அதனால்,மக்கள் மற்றும் தமிழக அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இவ்வாறு மக்கள் மற்றும் தமிழக அரசு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த வித உதவிகளையும் தமிழகத்திற்கு தரப்படவில்லை.அதுமட்டுமின்றி மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு ஆதரவு தெரிவத்து வருகிறது.

தற்போது தமிழகத்திற்கு தடுப்பூசி தட்டுப்பாடு அதிகளவில் காணப்படுகிறது.மேலும் நீட் தேர்வை ரத்து செய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.ஆனால் மத்திய அரசோ எதற்கும் செவி சாய்ப்பதில்லை.அந்தவகையில் தற்போது தமிழக முதல்வர் வரும் 18 –ம் தேதி டெல்லி செல்ல உள்ளார்.டெல்லி சென்று குடியரசு தலைவரை காண உள்ளார்.மேலும் பிரதமரையும் சந்திப்பதாகவும் கூறியுள்ளனர்.மேகதாது அணை கட்டுதல் தடுப்பு நடவடிக்கைகளை பற்றி கூற மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகவாதை சந்திக்க உள்ளார்.மத்திய நீர்வளத்துறை அமைச்சரை கர்நாடக முதல்வர் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.அவர்களின் சந்திப்பின் முடிவில் நீர்வளத்துறை அமைச்சர், கர்நாடக அரசுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்று கூறினார்.

இம்முறை முதல்வர் வரும் 18 ம் தேதி இரவு டெல்லியை சென்றடைவார்.அதனையடுத்து மறுநாள் அனைவரையும் சந்தித்து மீண்டும் கோரிக்கை மனுவை அளிப்பார் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.மேலும் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதி தொகையை தர கோரியும் முதல்வர் கேட்பதாக கூறியுள்ளனர்.மேலும் இந்த சந்திப்பானது மேகதாதாது அணை கட்டுவதை ரத்து செய்யக்கோரி என்பதில் திட்டவட்டமாக உள்ளது.இந்த சந்திப்பில் மத்திய அரசு தக்க பதிலை தமிழகத்திற்கு தரவில்லை என்றால் தமிழகம் அடுத்த கட்டமாக போராட்டங்களை நடத்தவும் தயாராக உள்ளதாக அரசியல் சுற்றுவட்டாரங்கள் கூறி வருகின்றனர்.இந்த மேகதாது அணை கட்டுதல் போராட்டம் ஆனது விவசாயிகளின் நலன் கருதியே என்றும் கூறுகின்றனர்.