கல்வி தொலைக்காட்சிக்கு முதலமைச்சர் பாராட்டு!

0
141

கல்வி தொலைக்காட்சிக்கு முதலமைச்சர் பாராட்டு!

கல்வி தொலைக்காட்சி இன்று தனது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கல்வி தொலைக்காட்சிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து பாராட்டியுள்ளார்.

கல்வி தொலைக்காட்சியில் அனைத்து விதமான பாடங்களை பற்றியும் மாணவர்களுக்கு மிகவும் எளிய முறையில் கற்பித்து வருகின்றது.

கொரோனா காலகட்டத்தில் இத்தகைய செயல்பாடுகள் கல்வி தொலைக்காட்சியில் வாயிலாக கற்பிப்பதனால் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் அமைகிறது.

இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், பொது அறிவியல், விண்வெளி, வரலாறு என அனைத்தைப் பாட பிரிவினை பற்றியும் ஆசிரியர்கள் பாடம் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கல்வி தொலைக்காட்சியானது முதல் ஆண்டினை முடித்து இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியதாவது “ஒரு ஆண்டு நிறைவு செய்திருக்கும் கல்வி தொலைக்காட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக கல்வி தொலைக்காட்சி திகழ்ந்து வருவதால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

கல்வி தொலைக்காட்சியில் பாடங்களை பார்க்க தவறவிட்டவர்கள் அடுத்த நாள் யூடியூப் மூலம் கல்வி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதனால் மாணவர்கள் மிகுந்த பயன் அடைகிறார்கள்.

மேலும் கல்வி தொலைக்காட்சியை மிக நேர்த்தியாக செயல்படுத்திவரும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்” என பாராட்டியுள்ளார்.