மோடியை எதிர்த்து கேள்வி கேட்ட முதல்வர்! ஆலோசனைக்கூட்டத்தில் நடந்தது என்ன?
கொரோனா தொற்றானது அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது அந்தவகையில் தற்போது கொரோனாவின் 2வது அலை உருவாகி மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.அந்தவகையில் டெல்லி உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.அதனை டெல்லி முதல்வரே பகிரங்கமாக கூறுயுள்ளார்.அதுமட்டுமின்றி டெல்லிக்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் மற்றும் இதர சலுகைகள் டெல்லிக்கு வராமல் இதர மாநிலங்களுக்கு செல்வதாக கூறியுள்ளார்.
அந்தவகையில் அதிகம் தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை கண்டு பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை கூட்டம் நடத்தினார்.அப்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது,டெல்லியில் பெருமளவு ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது.இங்கு ஆக்சிஜன் ஆலைகள் ஏதும் இல்லை.பிற மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவரப்படுகிறது.அப்படி கொண்டு வரும் வேளையில் அம்மாநிலங்கலே தடுத்து நிறுத்திக்கொள்கிறது.அதனால் இதனை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.அப்போதுதான் அனைத்து மாநிலங்களுக்கு ஆக்சிஜன் தடையின்றி விநியோகோம் ஆகும் எனவும் கூறினார்.அதுமட்டுமின்றி மிகவும் பாதுகாப்புடனும் இருக்கும் எனவும் கூறினார்.
அதனையடுத்து டெல்லிக்கு வர வேண்டிய டேங்கர் வேறொரு மாநிலத்தில் தடுக்கப்பட்டால்,மத்திய அரசில் யாரிடம் முறையிட வேண்டும் என கூட் டத்தில் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.டெல்லியில் அதிக அளவு ஆக்சிஜன் தேவைப்படுவதால்,தேவையை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.