மாஸ் காட்டும் முதல்வர்! அசத்தலான அறிவிப்பு!

0
251
#image_title
மாஸ் காட்டும் முதல்வர்! அசத்தலான அறிவிப்பு.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் முதல்வராக இருப்பவர் யோகி ஆதித்யநாத். இவர் முதல்வராவதற்கு முன்பு பல சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கிளப்பியவர். இதுதொடர்பாக அவர்மீது வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதுபோலவே அந்த மாநிலத்தில் உள்ள சில எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களும் சர்ச்சைகளுக்குப் பெயர்போனவர்களாக உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மத்தியில் ஆளும் பிஜேபி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிபெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது. முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமலேயே மாபெரும் வெற்றிபெற்ற பிஜேபி அதன்பின்பு யோகி ஆதித்யநாத்தை புதிய முதல்வராக நியமித்தது. முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றபின்பு, அந்த மாநிலத்தில் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
பல அதிரடி உத்தரவுகளுக்கு பெயர் போன யோகியின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தலைவிரித்து அடியதையும் தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்தி வந்தார். இதனிடையே உத்திரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதத்தில், பல்வேறு அரசு சம்பந்தமான அறிவிப்புகளை அம்மாநில அரசு அறிவித்து வருகிறது.
இந்நிலையில் வேலைவாய்ப்பு சம்பந்தமான திட்டத்தை தொடங்கி வைத்த யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் நிலுவையில் உள்ள குற்றவழக்குகள் விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவில் உள்ள ஒட்டுமொத்த காலி பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு குறித்து அம்மாநில டிஐஜி ரேணுகாமிஸ்ரா கூறுகையில், பல்வேறு வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன. அவற்றினை முடிப்பதற்கு சில கால அவகாசம் தேவையாக உள்ளது. மேலும் விசாரணை குழுவில் நிறைய காலிப்பணியிடங்கள் உள்ளது, அவற்றை நிரப்புவதற்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதிய பணியிடங்கள் நிரப்புவதில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன, அவற்றை தீர்ப்பது எளிதல்ல, மேலும் கூடுதல் பணியிடங்களும் நிரப்ப பட வேண்டும். இதன் மூலம் வழக்கு விசாரணை விரைவில் முடிக்கப்படும்.
முதல்வரின் புதிய உத்தரவால் மொத்தம் 181 இடங்கள் நிரப்பப்படவுள்ளதாகவும், இதனால் தேங்கிய வழக்குகள் விரைவில் முடிக்கப்படும் என டிஐஜி ரேணுகாமிஸ்ரா தெரிவித்துள்ளார்.