Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேர்தல் பரபரப்பிற்கு மத்தியில் இயக்குனர் சங்கர் மகள் திருமணத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்..!!

chief-minister-stalin-attended-director-shankars-daughters-wedding-amid-election-excitement

chief-minister-stalin-attended-director-shankars-daughters-wedding-amid-election-excitement

தேர்தல் பரபரப்பிற்கு மத்தியில் இயக்குனர் சங்கர் மகள் திருமணத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலின் இயக்குனர் சங்கர் மகள் திருமணத்திற்கு சென்று வாழ்த்தியுள்ளார். 

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் சங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவிற்கு கடந்த 2021ஆம் ஆண்டு புதுச்சேரியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே அந்த நபர் போக்சோ வழக்கில் கைதானார். இதனால் ஐஸ்வர்யா அவரின் பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். 

அதனை தொடர்ந்து அவருடன் வாழ விருப்பம் இல்லாததால் விவகாரத்து பெற்ற ஐஸ்வர்யாவிற்கு இரண்டாவது திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அந்த வகையில் தருண் கார்த்திகேயன் என்பவருடன் அவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர் உதவி இயக்குனராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து சங்கர் தனது மகளின் திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார். அதனை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் இவ்வளவு பிசியான வேலைகளுக்கு மத்தியிலும் திருமணத்திற்கு சென்று மணமக்களை ஆசீர்வாதம் செய்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Exit mobile version