Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சிறந்த லெக் ஸ்பின்னர் அவர் பந்து வீசினால் யாராலும் அடிக்க முடியாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

#image_title

முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சிறந்த லெக் ஸ்பின்னர் அவர் பந்து வீசினால் யாராலும் அடிக்க முடியாது  – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

சட்டப்பேரவையில் பதிலுரையின் போது பேசிய அமைச்சர் உதயநிதி , நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் தான். அதன் பிறகு என் தந்தை ஸ்டாலின் மேயரான பிறகு வேளச்சேரிக்கு குடி பெயர்ந்தோம் .

கோபாலபுரத்தில் இருக்கும்போது சின்ன வயதில் நானும் அன்பில் மகேஷம் சாலையில் கிரிக்கெட் விளையாடுவோம். கருணாநிதி உடனே கிரிக்கெட் விளையாடி உள்ளேன். அவர் எங்களுக்கு பந்தை போடுவார், பேட்டிங் ஆடி விட்டு சென்று விடுவார்.

கலைஞரோடு மட்டுமல்ல நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் உடனும் கிரிக்கெட் விளையாடி உள்ளேன். இன்னும் சொல்லப்போனால் ஸ்டாலின் மிகச்சிறந்த லெக் ஸ்பின்னர் அவர் பந்து வீசினால் யாராலும் ஆட முடியாது, இங்கே எப்படி சிக்சர் அடிக்கிறாரோ ,அதே போல பந்துவீச்சிலும் அப்படித்தான் .

எனக்கு இந்த விளையாட்டு துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கொடுத்து இன்று பதிலுரை அளிக்க வாய்ப்பு வழங்கியமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

Exit mobile version