தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. அதன்படி கடந்த 7ஆம் தேதி அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் சேர்ந்து அவருடைய அமைச்சரவை சார்ந்த 33 மந்திரிகளும் தங்களுடைய பதவியை ஏற்றுக் கொண்டு செயல்பட தொடங்கினார்கள்.
இந்த நிலையில். ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட அன்றைய தினமே அவர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த 5 திட்டங்களுக்கு கையொப்பமிட்டார். அதில் ஒன்றுதான் கொரோனா நிவாரண நிதியாக அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற ஆணை. அதன்படி நடப்பு மாதம் 2,000 ரூபாயும், எதிர்வரும் ஜூன் மாதம் 2,000 ரூபாயும் ஆக நான்காயிரம் ரூபாய் ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்து கையெழுத்திட்டிருந்தார்.
அந்தத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது தொடங்கி வைத்திருக்கிறார்.