கலெக்டர்களுக்கு 3 விஷயம் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

0
93

கோவையில் 5 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மூன்று முக்கியமான விஷயங்களை கலெக்டர்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் சென்னையை விட கோவை திருப்பூர் ஈரோடு சேலம் கரூர் போன்ற ஐந்து மாவட்டங்களில் கொரோணா தொற்று அதிகமாக பரவி வருகிறது. மேலும் உயிர் பலியும் இந்த ஐந்து மாவட்டங்களில் அதிகமாக உள்ளது.
அதனால் தொற்று பரவலை கட்டுபடுத்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஐந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஐந்து மாவட்ட ஆட்சியர் களையும் கோவைக்கு அழைத்து ஆலோசித்த முதல்வர், கொரோனா பரவியிருக்கும் விகிதம், உயிர்பலி மற்றும் ஆக்சிஜன் படுக்கைகளின் விவரம், கிராமங்களில் தொற்று அதிகமாக பரவுவதற்கான காரணம் என அனைத்தையும் கேட்டறிந்த அவர், ஆக்சிஜன் படுக்கைகளை அதிகமாக்க் உத்தரவிட்டார். ஆக்சிஜன் இல்லாமல் தான் உயிர் இழந்தார்கள் என எந்த ஒரு தகவலும் வரக்கூடாது. அதனால் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபடுங்கள் என்று கூறியுள்ளார்.

இரண்டாவதாக சென்னையில் உள்ள ‘வார் ரூம் ‘ போல இங்கும் ‘வார் ரூம் ‘ உருவாக்கி அந்த எண்ணை மக்களுக்கு சேர்ப்பிக்க வேண்டும். மக்கள் தொடர்பு கொள்ளுமாறு அந்த ‘வார் ரூம்’ இருக்க வேண்டும்.

மூன்றாவதாக அனுமதிக்கப்படாத தொழிற்சாலைகள் இயங்குகிறதா என்பதை பற்றி கண்காணிக்க வேண்டும். அரசால் அனுமதிக்கப்பட்ட அத்தியாவசியமான தொழிற்சாலைகளாக இருந்தாலும் தொழிலாளர்களை கூட்டிச் செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.அல்லது அந்த நிறுவனத்திலேயே தங்க வைத்துக் கொண்டு தொழிலாளர்களை வேலை செய்கிறார்களா என்பதைப் பற்றி கவனிக்க வேண்டும். அவர்களால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு விடக்கூடாது. என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்