ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சிறு குறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் திட்டம்.
தமிழகத்தில் பெஞ்சல் கடன் நவம்பர்-30 ஆம் தேதி கரையை கடந்தது. இந்த புயல் வட தமிழக மாவட்டங்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள வியாபாரிகள் பாதிப்படைந்து அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியதான் காரணமாக அதிக அளவில் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் முற்றிலும் நாசமானது. பல ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்து இருக்கிறார்கள். இந்த வெள்ளம் பாதித்த விவசாய நிலங்களுக்கு ஒரு ஏக்கர் விதம் 6800 ரூபாய் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த நிலையில் சிறு குறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்க ஏற்பாடு செய்ய அறிவித்து இருக்கிறது தமிழக அரசு. “சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்” மூலம் மேற்கூறிய 6 மாவட்டங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக தகுதியானவர்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.10,000/- முதல் ரூ.1 லட்சம் வரை சிறுவணிகக் கடன் வழங்கப்படும் என என அறிவித்து இருக்கிறார். இந்த திட்டத்தில் பயன் பெற வேண்டும் என்றால் கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்து இருக்க வேண்டும்.
அடுத்தபடியாக தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த அட்டையை வைத்து இருக்க வேண்டும். தெரு வியாபாரிகள், சிறு வணிகர்கள், பூ வியாபாரிகள், காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையாளர்கள், சாலையோர உணவகங்கள், புயலால் பாதித்த ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த திட்டத்தில் கடன் பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவார்கள்.