Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முகநூலில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட எல் கே சுதீஷ்! அதிர்ச்சியில் அதிமுக!

அதிமுக தேமுதிக இடையே சமீபகாலமாக பணிபோர் வெடித்து வந்தது. இந்த நிலையில், அந்த இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து எந்த ஒரு சுமூக முடிவும் எட்டப்படாமல் இருந்துவந்தது. தொடர்ந்து 3 முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளும் எந்த ஒரு சுமுகமான முடிவும் எட்டப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

அதிமுகவை தேமுதிகவை எப்படியேனும் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்து பார்க்கிறது . ஆனாலும் தேமுதிக பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையான தொகுதிகளை எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. அந்தக் கட்சிக்கு எப்பொழுதுமே வாக்கு வங்கி அதிகம் என்பதால் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் அதிமுக பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை நிறைவேற்றி விட்டது. ஆனால் அதே அளவிலான தொகுதியை கேட்கும் தேமுதிகவிற்கு வாக்கு வங்கி என்பது மிகவும் குறைவு. ஆகவே தேமுதிக கேட்கும் இடங்களை அதிமுக கொடுப்பதற்கு தயங்கி நிற்கின்றது.

தேமுதிகவிற்கு அதிமுக கூட்டணியில் 12 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் என்று அந்த இரு கட்சிகளின் பேச்சுவார்த்தை முடிவில் அதிமுக காரராக தெரிவித்துவிட்டது. ஆனாலும் அதிமுகவின் இந்த முடிவு தேமுதிகவிற்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில், பேச்சுவார்த்தையின்போது எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

அதேபோல விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் எந்த ஒரு சூழ்நிலையிலும் எங்களுடைய கட்சியை தலைகுனிய விடமாட்டோம் என்று பேசி இருக்கின்றார். இதற்கு காரணம் அதிமுக தான் என்று தெரிவிக்கிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சிக்கு எப்பொழுதுமே 7 சதவிகித வாக்கு வங்கி தமிழகத்தில் இருக்கிறது. ஆனால் தேமுதிகவிற்கு முழுமையாக 2% கூட இல்லை என்று சொல்கிறார்கள். 2011ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 29 தொகுதிகள் கொடுக்கப்பட்டது. ஆனால் அப்போது இருந்த தேமுதிகவின் நிலை வேறு, இப்போது இருக்கும் தேமுதிகவின் நிலை வேறு இதையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அந்தக் கட்சிக்கு 12 சீட்டுகள் கொடுப்பதே மிக அதிகம் என்று நினைக்கின்றார். ஆனால் இதை தேமுதிக புரிந்து கொள்ளவில்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரிடம் 29 தொகுதிகள் வாங்க முடிகின்றது என்றபோது இப்பொழுது மட்டும் நாம் ஏன் குறைவாக தொகுதிகளை வாங்க வேண்டும் என்ற நினைப்பில் தேமுதிக இருந்து வருகிறது. ஆனாலும் அதிகப்படியான தொகுதியை தேமுதிகவிற்கு கொடுத்தால் அதற்கு இருக்கும் வாக்குவங்கியுடன் ஒப்பிட்டு பார்த்தோமானால் கட்சியின் வெற்றி பாதிக்கப்படுமே என்று அதிமுக கவலையுறுகிறது.

அதிமுகவின் நிர்வாகிகள் மட்டத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இதுவரையில் அதிமுகவிற்கு, தேமுதிகவிற்கும், எந்த ஒரு உடன்பாடு ஏற்படாத நிலையில், அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எல்.கே. சுதீஷ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் துணை முதல்வருமான ஓபிஎஸ் அவர்களை சந்திப்பதற்காக நேரம் கேட்டிருக்கின்றார்.

இது ஒருபுறமிருக்க சுதீஷ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை போட்டு தமிழகம் முழுவதிலும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறார். அதில் நமது முதல்வர் விஜயகாந்த், நமது கொடி தேமுதிக கொடி, நமது சின்னம் முரசு, என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன்காரணமாக, அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி தொடருமா அல்லது தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால், கூட்டணியை விட்டு வெளியேற அந்த கட்சி முயற்சி செய்கிறதா? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

Exit mobile version