Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பதவியைத் தூக்கி எறிந்த முக்கிய அமைச்சர்! திமுகவில் பரபரப்பு!

திமுகவின் தகவல் தொழில் நுட்ப அணி செயலாளராக பணிபுரிந்து வந்த தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அந்த பதவியில் இருந்து விலகி இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வமான செய்தி வெளியாகியிருக்கிறது. திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, திமுகவின் சட்ட திட்ட விதி அடிப்படையில் தொழில் நுட்ப அணி செயலாளர் நியமனம், தலைமைக் கழக அறிவிப்பு, திமுகவின் தகவல் தொழில் நுட்ப அணி செயலாளராக பணிபுரிந்து வந்த தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் தியாகராஜன் அவர்கள் அரசு முழுமையான கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் அவர் அந்த பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக கழகத் தலைவர் அவர்களிடம் கடிதம் வழங்கி இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

அவருடைய கடிதத்தை ஏற்றுக்கொண்டு அவரை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவித்து கழக சட்ட விதி அடிப்படையில் அவருக்கு பதிலாக கழக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக டி.ஆர்.பி. ராஜா நியமிக்கப்படுகிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார் துரைமுருகன்.

ஆகவே ஏற்கனவே நியமிக்கப்பட்டிருக்கிற நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுவார்கள் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருக்கிறது. அதோடு திமுக அயலக அணி தலைவராக அப்துல்லா நியமனம் செய்யப்படுகிறார் என்றும் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

Exit mobile version