Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த பொருட்களை இனி இறக்குமதி செய்ய கூடாது? முதல்வர் வலியுறுத்தல்!

A letter written by the Chief Minister to the Union Minister! Should these products not be imported anymore?

A letter written by the Chief Minister to the Union Minister! Should these products not be imported anymore?

இந்த பொருட்களை இனி இறக்குமதி செய்ய கூடாது? முதல்வர் வலியுறுத்தல்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் ஒன்றை எழுதயுள்ளார். அந்த கடிதத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையிலும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வலியுறுத்தி நேற்று எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து தீப்பெட்டி உற்பத்தித் தொழில்லானது தமிழ்நாட்டின் தென்பகுதியில் வேலைவாய்ப்பிற்கான முக்கிய ஆதாரமாக விளங்குவதுடன் அந்த பகுதியில் பாரம்பரியத் தொழிலாகவும் கருதப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த தொழிலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர் என்றும் அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.அதனால் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை இறக்குமதி செய்ய கூடாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

Exit mobile version