ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் வைத்த கோரிக்கை!!

0
96

ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் வைத்த கோரிக்கை!!

 

கேரளா மாநிலத்தில் அடுத்த மாதம் ஓணம் பண்டிகை நடைபெறவுள்ளதை முன்னிட்டு கேரளமாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் வளைகுடா நாட்டிற்கு முக்கியமான கோரிக்கையை   வைத்துள்ளார்.

 

கேரளா மாநிலத்தில் வருடம் தோறும் ஓணம் பண்டிகை மக்கள்  அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. கேரளா மாநிலம் மட்டுமில்லாமல் ஓணம் பண்டிகை தமிழகத்திலும் மாணவர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு அதாவது 2023ம் ஆண்டு ஓணம் பண்டிகை ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது.

 

கேரளா மாநிலத்தை சேர்ந்த மக்கள் பலர் வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருகின்றனர். மேலும் கேரளாவை சேர்ந்தவர்கள் பலரும் பல தேவைகளுக்காக வளைகுடா நாட்டில் வசித்து வருகின்றனர். வளைகுடா நாடுகளில் வசிக்கும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஓணம் பண்டிகைக்கு நாடு திரும்ப தனி விமானங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

 

இது தொடர்பாக கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் மத்தியப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் பினராயி விஜயன் எழுதிய கடிதத்தில் “கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. வளைகுடா நாடுகளில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த மக்கள் நாடு திரும்ப தனி விமானங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். ஆகஸ்ட் 15ம் தேதி முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை வளைகுடா நாடுகளுக்கு தனி விமானம் இயக்க வேண்டும்” என்று எழுதியுள்ளார்.