Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எதிர்கால தலைமுறையினருக்கு தமிழில் பெயர் சூட்ட முதலமைச்சர் வேண்டுகோள்!

எதிர்கால தலைமுறையினருக்கு அழகான தமிழில் பெயரை சூட்டுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைமை நிலையச் செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான பூச்சி முருகன் இல்ல திருமண விழா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார்.

நிகழ்வின் போது, உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கட்டுப்பாடுகளுடன் இந்த திருமணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பூச்சி முருகனை வாழ்த்தினார்.

பூச்சி முருகனை பலர் பூச்சி என்று அழைப்பார்கள், தாம் மட்டும் முருகன் என்று அழைப்பேன் என்று ஸ்டாலின் தெரிவித்தார். ஏனென்றால்
முருகன் மீது எனக்கு தனிப்பட்ட அன்பும் பாசமும் உண்டு என தெரிவித்தார்.

Exit mobile version