இந்த குடும்பங்களுக்கு முதல்வரின் ரூ 20 லட்சம்! மக்கள் போற்றும் நாயகனாக ஸ்டாலின்!
நம் அன்றாட வாழ்க்கையை நலமாக நடத்துவதற்கு பலபேர் நமது நாட்டில் உழைத்து வருகின்றனர்.அந்த வகையில் ராணுவ வீரர்களும் ,விவசாயிகளும் முதலில் அடங்குவர்.முதல்வர் ஸ்டாலின் பதவி வகித்ததிலிருந்து பல நல் உதவிகளை செய்து வருகிறார்.அவ்வாறு நம் பாதுகாப்பிற்காக தினம் தினம் எல்லையிலிருந்து போராடும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை நிமிர்த்தமாகவும் அவர்கள் குடும்ப வாழ்வாதாரத்தை மேலோங்கிடவும் பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த நான்கு பேரின் வாரிசுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலா 20 லட்சம் ரூபாய் வழங்கினார். அத்தோடு கார்கில் போராட்ட வீரர்களின் நிவாரண நிதியிலிருந்து அவர்களது குடும்பத்தினருக்கும் தலா 20 லட்சம் வழங்கினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் சோளம்பட்டு கிராமத்தை சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் என் பாலமுருகனின் தாய் குருவம்மாள் ஆகியோருக்கு தலா 20 லட்சம் ரூபாய் ஸ்டாலின் வழங்கினார்.
அதனை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் இராகிமனாப் பள்ளி கிராமத்தை சேர்ந்த மறைந்த படை அலுவலர் எஸ் ஆனந்த் அவரது மனைவி பிரியங்கா நாயர் குடும்பத்திற்கும் தலா 20 லட்சம் ரூபாய் வழங்கினார். அதேபோல திருப்பத்தூர் மாவட்டம் காகங்கரை கிராமத்தை சேர்ந்த மறைந்த படைவீரர் சபரிநாதன் தாய் எஸ் மனோன்மணி அவர்களுக்கும் 20 லட்சம் வழங்கினார். இவ்வாறு மறைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்கள் முதல்வர் மூலம் நிவாரண நிதியை பெற்றுக் கொண்டனர்