விவசாயிகள் நலனுக்கு போராடும் முதல்வர்! ஆதரிக்குமா ஒன்றிய அரசு!
கர்நாடகவில் பல வருடம் காலமாக இந்த காவிரி சம்மந்தமான பிரச்சனை நடந்த வண்ணமாகதான் உள்ளது.மத்திய அரசிடம் இதுபற்றி பல கோரிக்கைகள் வைத்தும் எந்த வித முடிவுகளையும் எடுக்கவில்லை.தற்போது மேகதாது மீது எந்தவித அணையையும் கட்ட கூடாது என்ற சட்டம் இருந்தாலும் கர்நாடகா அதை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் அணையை கட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
அதனால் நம் தமிழக முதல்வர் தமிழகத்தின் அனைத்து கட்சி உறுப்பினர்களிடமும் உதவி கோரி கேட்டுள்ளார்.அதனால் இன்று தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது.அதில் முக்கிய மூன்று அறிவிப்புகள் வெளியிடுவதாக கூறியிருந்தனர்.தற்போது மேகதாது அனை கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி காவிரியின் கீழ் படுகையிலுள்ள மாநிலங்களின் அனுமதியை பெறாமல் தற்போது கர்நாடக,மேகதாது அணை கட்டுவதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.கட்டக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியதையும் மீறியும் அணை கட்டுவதற்கு முயல்கிறது.இக்காரணத்தினால் இன்று முதல்வர் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.தமிழ்நாட்டிலுள்ள அனனத்து மக்களும் இதற்கு முழு எதிர்ப்பை தரும் நோக்கில் நாம் முடிந்தவரை அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்று கேட்டார்.
இன்று நடந்த கூடத்தில் முதல்வர் கூறியதாவது,காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் ஒற்றுமையை கர்நாடக-விற்கும்,மத்திய அரசிற்கும் உணர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி தமிழ்நாட்டிற்கு காவிரி என்பது வாழ்வுரிமை எனவும் கூறினார்.அதேபோல மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அந்த கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.ஒன்றிய அரசு ஆதரவு தெரிவிக்காத நிலையில் பல எதிர்ப்புகள் தமிழகத்திலிருந்து கர்நாடக -வை நோக்கி காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.