களத்தில் இறங்கிய முதல்வர்! 14 கோடி திட்ட பணிகள் ஆய்வு!!
திமுக தமிழகத்தில் ஆட்சி பெற்ற முதலே பல நத்திட்ட பணிகள் நடந்து வருகிறது.அவ்வபோது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வாத்தி ரைடு செய்து வருகிறார்.அதாவது திடீரென்று ஏதேனும் துறைக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தி வருகிறார்.சென்ற வாரம் தான் தலைமை செயலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு மனு கொடுக்க வந்தவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.காலை மெட்ரோ ரயிலில் பயணித்த முதல்வர் அதனையடுத்து நடைபெற்று வரும் திட்டங்களை ஆய்வு மேற்கொள்வதாக கூறினர்.அதேபோலவே காலையில் மெட்ரோவில் பயனத்தி முடித்தார்.அதனையடுத்து கத்திப்பாரா நகர்புற சதுக்கம் பணிகள் நடைபெறுவதை ஆய்வு மேற்கொண்டார்.இந்த திட்டமானது 14 கோடி மதிப்பில் உருவாக உள்ளது.பூங்காக்கள்,வணிக வளாகங்கள் போன்றவற்றை அமல்படுத்த உள்ளனர்.மேலும் மெட்ரோ ரயிலில் நடைபெரும் பணியை குறித்து அதன் நிறுவனர் பிரதிப் யாதவ் முதல்வருக்கு விளக்கம் அளித்தார்.மேலும் இங்கு பல கடைகள் கட்டப்பட்டுள்ளதால் அது பொருட்களை வாங்கும் பஜார் போல காணப்படும் என கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி ஒருகிணைந்த பேருந்து நிலையம் காட்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.இந்த வார இறுதியில் இதற்கான பணிகள் முடிந்து திறப்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கடுத்து முதல்வர் போரூரில் உள்ள மெட்ரோ ரயில் பணிகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ளனர்.