முதல்வரின் தங்கை கைது! அதிர்ச்சியில் தொண்டர்கள்!
ஆந்திர மாநில முதல்வர்களுக்கென்றே ஓர் நல்ல மதிப்பும் மரியாதையும் உள்ளது.அந்தவகையில் ஆந்திரா மாநிலம் மறைந்த முதலமைச்சர் ஓ.எஸ்.ராஜசேகர ரெட்டி இவருக்கு அதிக அளவு மத்திப்பும்,மரியாதையும் அம்மாநிலத்தில் உள்ளது.அந்த அளவிற்கு அதிக நம்மைகளை அம்மக்களுக்கு செய்துள்ளார்.அவரது மறைவு அம்மாநிலத்தில் பெரும் இழப்பாக இருந்தது.அவரைப்போலவே அவரது மகன் அவர் இடத்திற்கு வந்தார்.தற்போது ஆந்திரா மாநில முதல்வராக ஜெகன் மோகன்ரெட்டி உள்ளார்.
அவர் பல நலத்திட்டங்களை அவரது தந்தையை போலவே அம்மாநிலத்திற்கு செய்து வருகிறார்.அவரது தங்கையின் பெயர் சர்மிளா.தற்போது தெலுங்கானாவில் இவரது தந்தை பிறந்நாள் ஆன ஜூலை 8 ஆம் தேதி புதிய கட்சி தொடங்க உள்ளார்.மேலும் அவர் ஆட்சிக்கு வரும் முன்னே அம்மாநிலத்திலுள்ள 1.91 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புமாறு எப்ரல் 15-ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்போவதாக தெரவித்தார்.
ஆனால் தெலுங்கான போலீசார் சர்மிளா போராட்டம் நடத்த ஓர் நாள் மட்டுமே அனுமதித்தனர்.இருப்பினும் சர்மிளா,தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு அனுமதி வழங்க வேண்டுமென கேட்டார்.ஆனால் அவர் கேட்ட கோரிக்ககைக்கு தெலுங்கான போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.அதற்கடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன் தலைமை செயலகம் நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டார்.
அவர் நடைப்பயணம் மேற்கொள்ளும் பொழுது போலீசார் அவரை தடுப்புக்காவலில் கைது செய்து அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்று விட்டனர்.அதன்பின் சர்மிளா,தனது வீட்டினின் வெளியவே உட்கார்ந்துக்கொண்டு போராட்டம் நடத்த தொடங்கியுள்ளார்.மேற்கொண்டு அவர் கூறியது,மூன்று நாட்கள் தொடர்ந்து தன் வீட்டின்முன்னே உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.