குழந்தைகள் காப்பகங்களில் பிறந்தநாள் கொண்டாட தடை.!! அரசு அறிவிப்பு.!!

0
155

திருமண நாள், பிறந்த நாள் மாதிரியான வாழ்வின் முக்கிய கொண்டாட்ட நாட்களில் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் தனி நபர்கள் குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாடுவது வழக்கம்.

அன்றைய தினம் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு, பரிசுப் பொருட்கள் வழங்கி அவர்களுடன் நேரத்தை செலவிடுவது வழக்கம்.

இந்நிலையில், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் தனிநபர்கள் குழந்தைகள் நல காப்பகங்களில் பிறந்தநாள் கொண்டாட தடைவிதித்துள்ளது கர்நாடக அரசு. இந்த தடை அக்டோபர் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளி நபர்கள் தங்கள் பிறந்தநாளை காப்பகத்தில் உள்ள குழந்தைகளுடன் கொண்டாடும்போது அவர்களுக்கு எதிர்மறையான எண்ணங்கள் உருவாகிறது. அதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படலாம் என்ற நோக்கத்தில் இந்த தடையை கர்நாடக அரசு கொண்டு வந்துள்ளதாக விளக்கம் கொடுத்துள்ளது.

மேலும், அரசின் இந்த தடைக்கு கன்னட மக்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்துள்ளனர். ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் கல்வி சார்ந்த பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு காண முன்வர வேண்டும் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில் பிறந்த நாள் விழாக்களை கொண்டாடுவது பரிசுகளை பரிமாறிக் கொள்வதும் மன ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்தாது என்பது அவர்களது வாதமாக உள்ளது. இதைத்தான் உளவியல் வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர்.