குழந்தை திருமணம் தவறில்லை..அதனை வீடியோ எடுத்தால் லாக்கப் தான்!! 

0
229
16-year-old girl and 18-year-old student at the bus station Tum Tum!! Viral video!!

குழந்தை திருமணம் தவறில்லை..அதனை வீடியோ எடுத்தால் லாக்கப் தான்!!

நேற்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் பள்ளி படிக்கும் மாணவியை பாலிடெக்னிக் கல்லூரி படிக்கும் மாணவன் தாலி கட்டி உள்ளான். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. குழந்தை திருமணம் என்பது நமது சட்டத்திற்கு எதிரானது. ஆனால் அதனை பெரிது படுத்தாமல், அவர்கள் செய்ததை வீடியோ எடுத்து பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பள்ளி மாணவி மற்றும் கல்லூரி மாணவன் திருமணம் செய்யும்பொழுது அங்கிருந்த பாலாஜி கணேஷ் என்பவர் வீடியோ எடுத்துள்ளார். அவ்வாறு எடுத்தவர் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அவர் , வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தை திருமணம் செய்து கொண்டவர்களின் பெற்றோர்கள் வீடியோ எடுத்தவர் மீது புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் வீடியோ எடுத்தவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.