Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிவனின் அருள் பெற்ற குழந்தைகள் இந்த ஒரு கிழமையில் தான் பிறக்கும்..!!

சிவபெருமான் என்றாலே கருணையின் மறு உருவம் என்று நாம் அனைவரும் அறிவோம். அந்த அளவிற்கு இறக்க குணம் உடையவராக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ஒருவர் தனது வாழ்க்கையில் துன்பம் ஏற்படுகிற பொழுது உதவி என கடவுளை அழைக்கும் பொழுது முழு முதல் கடவுளாக வருபவரும் இந்த சிவபெருமான் தான். அப்பேர்ப்பட்ட சிவபெருமானிற்கு ஒருவர் பக்தராக இருந்து அனுதினமும் மனம் உருகி வழிபட்டு வந்தார்கள் என்றால், அந்த நபருடைய வாழ்க்கையில் சகல விதமான சௌபாக்கியங்களையும் பெற்று நிம்மதியாக வாழ முடியும்.

அதேபோன்று சிவபெருமானின் மூல மந்திரமான “ஓம் நமச்சிவாய” என்ற மந்திரத்தை அனுதினமும் 108 முறை சொல்லி வந்தோம் என்றால், இந்த உலகில் மாபெரும் இன்பமான முக்தி நிலையை அடைய முடியும் என்று கூறப்படுகிறது. அப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்த சிவபெருமானிற்கு உரிய நாளில் ஒரு குழந்தை பிறக்கிறது என்றால், அவர்களுடைய வாழ்வில் சிவபெருமானின் பரிபூரணமான அருளையும், நிறைந்த கடவுள் கடாட்சத்தையும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு சிறப்பு வாய்ந்த சிவபெருமானின் பரிபூரணமான அருளால் பிறக்கக்கூடிய குழந்தைகள் திங்கள் கிழமை அதாவது சிவபெருமானுக்கு உகந்த நாளில் பிறக்கும் என்று நமது முன்னோர்களால் வகுக்கப்பட்ட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே உங்கள் குடும்பத்தில் உள்ள யாரேனும் திங்கள் கிழமையில் பிறந்திருந்தால் அவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்று தான் கூற வேண்டும்.

திங்கள் கிழமை நாட்களில் விரதம் இருந்து முறையாக சிவபெருமானை வழிபட்டு வந்தோம் என்றால் நமது வாழ்வில் ஏராளமான நன்மைகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த திங்கள்கிழமையில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே செல்வ செழிப்பும், கல்வி வளமும், ஞானத் தெளிவும் இருக்கும். அதேபோன்று திங்கள்கிழமையில் பிறந்தவர்கள் இயற்கையாகவே சிவபெருமானின் மீது அதிகம் நாட்டம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

மேலும் இந்த திங்கள் கிழமையில் பிறந்து சிவபெருமானின் பரிபூரணமான அருளை பெற்ற நபர்கள் எப்பொழுதும் உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்களாகவும், நேர்மையான வழியில் வாழ்பவர்கள் ஆகவும் இருப்பார்கள். திங்கள் கிழமை நாட்களில் சிவபெருமானின் பூஜைக்கு தேவையான பொருட்கள் மற்றும் விளக்கேற்றும் எண்ணெய் போன்றவற்றை வாங்கி கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு கிடைக்க கூடிய நன்மைகள் இரட்டிப்பாகும்.

அதேபோன்று மேஷம், விருச்சிகம், கன்னி, கும்பம் போன்ற ராசியில் பிறந்தவர்களும் சிவபெருமானின் அருளை பெற்றவர்களாக கூறப்படுகின்றனர். இந்த ராசிக்காரர்களும் சிவபெருமானை இயற்கையிலேயே விரும்பி வழிபட்டு வருபவர்களாகவும், சிவபெருமானின் அருளை பெற்று இருப்பவர்கள் ஆகவும் கூறப்படுகிறது.

Exit mobile version