Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குழந்தைகள் தின ஸ்பெஷல்! அவரின் இறுதி உயில்.. நேரு மாமா பற்றி அறியாத தகவல்கள்! 

Children's Day Special! His last will.. unknown information about Uncle Nehru!

Children's Day Special! His last will.. unknown information about Uncle Nehru!

குழந்தைகள் தின ஸ்பெஷல்! அவரின் இறுதி உயில்.. நேரு மாமா பற்றி அறியாத தகவல்கள்!

ஜவஹர்லால் நேரு இந்தியாவின் சிற்பி என்று பெருமையாக அழைக்கப்படுவார். இவர் பிறந்த நாள் தான்  குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் வசதி மிக்க குடும்பத்தில் பிறந்திருந்தாலும் காந்தியின் அகிம் செய்முறையால் ஈர்க்கப்பட்ட சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார். இவர் 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து 1945 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பங்கேற்றார்.

வெள்ளையனு வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதால் இவருக்கு 9 ஆண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்தியாவின் முதல் பிரதமர் இவரே. இந்தியாவின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அதில் ஒன்றுதான் உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கியது. நேருவிற்கு குழந்தைகள் என்றால் அலாதிய பிரியம்.

அதனால் குழந்தைகள் இவரை நேரு மாமா ரோஜாவின் ராஜா என பாசமுடன் அழைத்து வந்தனர். இவர் குடும்பம் வசதி மிக்கதால், இவருக்கு வீட்டிலேயே ஆசிரியர்கள் வந்து பாடல் கற்பித்தனர். மேலும் இவர் மேல் படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார். மேலும் இவர் உயிர்விடும் தருவாயில் கூட ஒரு உயிலை எழுதி வைத்தார். அதில், நான் உயிரிழந்த பிறகு எனக்கு எந்த ஒரு மதச் சடங்கை பின்பற்றியும் இறுதி சடங்கு நடத்தக்கூடாது. எனது உடலை எரியூட்ட வேண்டும்.

எனது அஸ்தியை சிறிதளவு கங்கையில் கரைக்க வேண்டும். அப்பொழுதுதான் என்னை இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாது. நேருவின் தேசப்பற்றானது இவர் எழுதி வைத்த உயிலில் மூலம் வெளிப்படுத்தியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இறக்கும் தருவாயில் கூட நேரு புத்தகம் படிப்பதை நிறுத்தவில்லை. இவ்வாறான பெரிய ஜாம்பவானின் பிறந்த நாளை தான் நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம்.

Exit mobile version