குழந்தைகளின் பேவரைட் டீ கடை “கஜாடா”..  இப்படி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்!!

0
61
Children's favorite tea shop "Kazada".

குழந்தைகளின் பேவரைட் டீ கடை “கஜாடா”..  இப்படி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இனிப்பு பண்டம் என்றால் உயிர்.இந்த இனிப்பு வகைகளில் ஒன்று கஜாடா.மைதா மாவு + ரவை +சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் இந்த இனிப்பு பொருளை டீ கடை சுவையில் செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது.செய்து ருசித்து சாப்பிட்டு பாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

*மைதா மாவு – 1 கப்
அல்லது
கோதுமை மாவு

*ரவை – 1/4 கப்

*சக்கரை – 1/2 கப்

*காய்ச்கிய பால் – தேவையான அளவு

*ஏலக்காய் – 4

*முட்டை – 1

*சமையல் சோடா – 1 சிட்டிகை

*உப்பு – 1 சிட்டிகை

செய்முறை:-

முதலில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் 1/2 கப் சர்க்கரை மற்றும் ஏலக்காயை சேர்த்து பொடித்து கொள்ளவும்.

பின்னர் ஒரு அகலமான பாத்திரம் எடுத்து அதில் 1 கப் மைதா மாவு,1/4 கப் ரவை,பொடித்து வைத்துள்ள சர்க்கரை கலவை மற்றும் சிட்டிகை அளவு உப்பு சேர்த்துகலந்து விடவும்.

பின்னர் 1 முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும்.அதை கலந்து விட்டு அடுத்து தேவையான அளவு காய்ச்சிய பால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிணைந்து கொள்ளவும்.பின்னர் சிறிதளவு நெய் சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாத வாறு மீண்டும் பிணைந்து கொள்ளவும்.இதை 10 நிமிடம் ஊற விடவும்.

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து கஜாடா பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.அவை சூடேறியதும் ஊற வைத்துள்ள மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி போடவும்.மைதா கலவை நன்கு வெந்து வந்ததும் ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.இவ்வாறு ஒவ்வொன்றாக பொரித்தெடுக்கவும்.