ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் என அனைத்தும் தொடர்ந்து ஆய்வு செய்து அதற்குரிய தேவைகளை உடனடியாக செய்து தருவதாக விடியா அரசு முழக்கமிட்டு வருகிறது. ஆனால் தாங்கள் கொண்டு வந்த எந்த ஒரு புதிய திட்டம் மற்றும் நடவடிக்கையும் செயல்படும் நோக்கத்தில் வடிவமைக்கப்படவில்லை. அதில் முதலாவதாக நவீன மயமாக்கப்பட்ட புதிய பேருந்துகளை மண்டலங்கள் தோறும் வெளியிட்டனர்.
ஆனால் அவ்வாறு வந்த புதிய பேருந்துகளே பாதி வழியில் கோளாறு ஏற்பட்ட நின்று விடுகிறது. இதனின் உச்சகட்டமாக சென்னையில் நேற்று பேருந்தை பயணிகள் தள்ளி பின்பு இயக்கும் நிலையும் வந்தது. இது அனைத்தும் விடியா அரசின் அலட்சியமின்மை தான். தங்களின் பெட்டியை நிரப்புவதற்காக மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை பெருமளவு சுரண்டுகின்றனர். அந்த வரிசையில் இரண்டாவதாக தேனியில் பால் காட்சிய மறுநாளே அங்கன்வாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளது தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் அதன் படங்களை வெளியிட்டு பகிர்ந்து வருகின்றனர். அது எப்படி பால் காட்சிய மறுநாளே அதன் கட்டிட பணிகள் சரி வராமல் அமைந்திருக்கும் ? இது குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா ?? என கேள்வி எழுப்பியும் வருகின்றனர். இதே போல செங்கல்பட்டிலும் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து குழந்தைகள் பலத்த காயம் அடைந்துள்ளனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தங்களது விளம்பரத்தை ஊரெங்கும் காட்டும் விதமாக தந்தையின் உருவ சிலையை திறந்து வைப்பது உள்ளிட்டவைகளை மட்டும் எந்த ஒரு சேதாரமுமின்றி முதலவர் செய்து வருகிறார் மற்ற நடவடிக்களை குறித்து கண்டுக்கொள்வதில்லை. இது குறித்து கொந்தளித்து பல நெட்டிசன்கள் தொடர்ந்து இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.