இவர்கள் சம்பாதிக்கும் வருமானத்திற்கும் வரி உண்டு!

0
152

இந்திய வருமான வரி சட்டப்படி ஒரு நிதியாண்டில் ஈட்டிய மொத்த வருமானம் என்பது பலவித பிரிவுகளில் வருமான வரியின் விகிதங்கள் விதிக்கப்படுகின்றது. அதேபோல ஒவ்வொரு விதமான வருமானத்திற்கும் வருமான வரியின் விகிதம் மாறும். பரிசு, லாட்டரி பங்குகள், விற்பதன் மூலமாக கிடைத்த லாபம் என ஒரு சில வருமானங்களுக்கு வருவிகிதம் மாறும் என சொல்லப்படுகிறது.

மூத்த குடிமக்களுக்கு கூடுதல் விலக்குகள் வழங்கப்பட்டுள்ளனர், அதேபோல குழந்தைகள் பெறும் பரிசுகள் போட்டிகள் மூலமாக வெல்லும் பணம் குழந்தைகள் பெயரில் முதலீடு செய்த தொகையிலிருந்து கிடைக்கும் வருமானம் விளம்பரம் மற்றும் திரைப்படங்களில் நடிக்கும் குழந்தைகள் சம்பாதிக்கும் வருமானம் உள்ளிட்டவற்றுக்கு வரி செலுத்த வேண்டுமா? என்பது பலரின் சந்தேகமாக இருக்கிறது. 18 வயதிற்கு உட்பட்ட மைனர் மூலமாக வரும் வருமானத்திற்கு வரி செலுத்தும் கடமை யாருடையது என்பதை பற்றி தற்போது நாம் பார்க்கலாம்.

18 வயதுக்குட்பட்ட மைனர்கள் ஈட்டும் வருமானம்

குழந்தைகள் சம்பாதிக்கும் எந்த விதமான வருமானமாக இருந்தாலும் அது 2 வகையாக பிரிக்கப்படுகிறது. அதாவது குழந்தை சம்பாதித்தது. குழந்தைக்கு பரிசாக கிடைத்தது, குழந்தை தானாக சம்பாதித்தது என்பது பார்ட் டைம் வேலை வணிகத்தில் பங்கேற்றது.

அல்லது வேறு ஏதாவது வேலை செய்வதன் மூலமாக குழந்தைகள் ஈட்டும் வருமானத்தை குறிக்கும் குழந்தை சம்பாதிக்காத தொகை என்பது நண்பர்கள் உறவினர்கள் போட்டிகள் உள்ளீடற்றிலிருந்து பெறப்பட்ட பரிசு தொகையாக குறிக்கப்படும்.

குழந்தை ஈட்டிய வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டுமா?

இந்திய வருமான வரிச் சட்டம் பிரிவு 64(1A)வின் கீழ் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஈட்டும் வருமானம் அவர்களின் பெற்றோரின் வருமானத்துடன் இணைக்கப்படும் பெற்றோரின் வருமானத்துடன் குழந்தையின் வருமானத்தை சேர்த்த பின்பு மொத்த தொகைக்கு ஏற்றார் போல வரி எவ்வளவு செலுத்த வேண்டும் என கணக்கிடப்பட வேண்டும்.

தாய், தந்தை, இருவருமே வேலைக்கு செல்லும் பெற்றோராக இருந்தால் யாருடைய ஆண்டு வருமானம் அதிகமாக இருக்கிறதோ, அவருடைய வருமான வரி கணக்கில் குழந்தையின் வருமானம் இணைக்கப்படும்.

அதே சமயத்தில் அதிகபட்சமாக 2 குழந்தைகள் வரையில் இருந்தால் ஒரு குழந்தைக்கு 1500 ரூபாய் என்ற வீதம் பெற்றோர்கள் குழந்தையின் வருமானத்திலிருந்து வரி விலக்கு பெற்றுக் கொள்ளலாம் என சொல்லப்படுகிறது.

மைனர் குழந்தை வருமானத்திற்கான வரி விலக்கு

18 வயதிற்குட்பட்டு வருமானம் பெறும் குழந்தையின் தாய், தந்தை, இருவருமே உயிரிழந்து விட்டார்கள், குழந்தைக்கு ஆதரவளிக்க யாரும் இல்லை என்ற பட்சத்தில் குழந்தையின் வருமானம் தனியாகத்தான் கணக்கிடப்படும்.

அதேபோல குழந்தைக்கு உடல் ரீதியாக ஏதாவது பாதிப்புகள் இருந்தால் வருமான வரிச் சட்டம் பிரிவு 80(U)ன் அடிப்படையில் பெற்றோரின் வருமானத்துடன் குழந்தையின் வருமானம் இணைத்துக் கொள்ளப்படாது.

உடல் ரீதியாக குறைபாடுகளில் 40 சதவீதம் பாதிப்பு இருந்தால் இந்த விலக்கு கிடைக்கும் காது கேளாமை, கண் பார்வை குறைபாடு, மனநல பாதிப்பு, கை அல்லது கால் இயங்காத தன்மை போன்றவையும் இதில் அடங்கும் என சொல்லப்படுகிறது.

மைனர் குழந்தையால் தானாக வரி கணக்கிட்டு வருமான வரி தாக்கல் செய்ய இயலாது என்பதால் குழந்தையின் சார்பாக பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ இதனை செய்யலாம். அதே போல குழந்தையின் சார்பாக பெற்றோர் அல்லது பாதுகாவலர் குழந்தையின் பெயரில் பான் கார்டு விண்ணப்பம் செய்து குழந்தையின் பெயரில் பயன்படுத்தலாம்.