சீனாவின் நரி தந்திரத்தால் இந்தியாவுக்கு சிக்கல்!!

0
109

சீனா தற்பொழுது உலக நாடுகளை குறிவைத்து பணவலை விரிக்கும் நரி தந்திரத்தை அரங்கேற்ற நினைப்பதால், இந்தியாவிற்கு கொஞ்சம் சிக்கல் ஏற்பட காத்திருக்கிறது.

ஏனென்றால்,உலகில் வளர்ந்து வரும் 68 நாடுகளுக்கு சீனா தாராளமாக கடன் கொடுத்து இருக்கிறதாம். உலக வங்கி இந்த 68 நாடுகளுக்கு கொடுத்து இருக்கும் கடன் அளவுக்கு கொஞ்சம் குறைவாக கொடுத்துள்ளனர்..

2018-ம் ஆண்டு கணக்குப் படி, உலக வங்கி இந்த 68 வளரும் நாடுகளுக்கு கொடுத்திருக்கும் கடனில், பாக்கி நிலுவைத் தொகை, சுமாராக 103 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது. இதுவே சீனாவுக்கு, இந்த நாடுகள் கொடுக்க வேண்டிய பாக்கி கடன் தொகை சுமாராக 101 பில்லியன் அமெரிக்க டாலர் கடன்  கொடுத்திருக்கின்றனர்.

இன்று கொரோனா வைரஸ் பிரச்சனையால் பொருளாதார ரீதியாக பலத்த அடி வாங்கிக் கொண்டு இருக்கும் பல வளரும் நாடுகளும், சீனாவின் உதவியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு 

இலங்கைக்கும், சீனா கடுமையாக கடன் கொடுத்தது. இலங்கையால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்ற உடன், கடந்த 2017-ம் ஆண்டு, சீனாவுக்கு, ஹம்பந்தொட்டா துறைமுகத்தை, 99 ஆண்டு காலத்துக்கு, குத்தகைக்கு கொடுத்துவிட்டது. இது இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் செயல்.

இப்படி, சீனா தன் பண வலையை கடன் வலையாக விரித்து, பல நாடுகளை அதில் சிக்க வைத்துக் கொண்டு இருக்கிறது. சீனா இந்த கடன் வலையை வைத்தே உலகில் பாதி நாடுகளை தன் கைக்குள் கொண்டு வந்துவிடும்  போல, இதை  உணர்ந்து இனியாவது உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் அதற்கான  நடவடிக்கையை எடுக்க வேண்டும்.