பல்லவ தேசத்தில் சீன அதிபர், தமிழகத்தின் வரலாறு பக்கம் மீது உலக தலைவர்களின் பார்வையை திருப்பிய மோடி.
சரித்திரத்தில் இடம் பெறவிருக்கும் சீன அதிபர் ஜி ஜின் பிங் மற்றும் இந்திய பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி, உலக தலைவர்களின் பார்வையை தமிழகத்தின் பக்கம் பல்லவ மன்னன் தேசத்தில் திருப்பி உள்ளது. உலக அரங்கில் தமிழனின் பெருமையை மீண்டும் ஒரு நிகழ்கால சரித்திரத்தை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார், அதற்காக தமிழர்கள் அவருக்கு நன்றியை செலுத்த வேண்டும்.
சீனாவிற்கும் தமிழருக்கும் தொப்புள்கொடி உறவு பண்டைய காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. புத்த மதத்தை சீனாவில் பரப்பி இன்று உலகில் மூன்றாவது பெரிய மதமாக மாறி இருப்பதற்கு தமிழன் தான் காரணம். உலக தற்காப்பு கலைகளில் முதன்மையான குங்ஃபூ கலையை தமிழன் தான் சீனாவிற்கு கற்றுக் கொடுத்தான் என்பது வரலாறு.
தமிழனுக்கு மட்டுமே சொந்தமானகலையை இன்று சீனா தனக்குதான் உரித்தானது என்று காப்புரிமை பெற்றுவிட்டது. ஆனால் அது தமிழகத்தில் இருந்து சென்றவை தான் என்பது 95 சதவிகித உலக வாழ் மக்களுக்கு தெரியாது, காரணம் அந்த அந்த அளவு தமிழனின் பெருமையையும் கலாச்சாரத்தையும் நாம் மறந்துவிட்டோம், மறக்கடித்து விட்டோம்.
பல்லவ மன்னன் போதிதர்மன் தமிழகத்திலிருந்து கலையை எடுத்துச் சென்று இன்று வல்லரசான சீனாவிடம் கொடுத்துவிட்டான் என்பது வரலாறு, ஆனால் அதனை நாம் மறந்து விட்டோம்.
பல்லவ மன்னன் தேசத்திற்கும் சீனாவிற்கும் இருந்த உறவை எவராலும் மறுக்க முடியாது அந்த அளவுக்கு பொருளாதார ரீதியாகவும் பண்பாட்டு முறையிலும் நட்பாக இருந்தனர்.
உலக தலைவர்களை மோடியின் ராஜதந்திரம் இந்தியாவின் தமிழகம் பக்கம் கம்பீரமாக திருப்பி உள்ளார், அவர் நினைத்திருந்தால் சீன அதிபர் ஜி ஜின் பிங்கை அவருக்கு பெரும் ஆதரவு கொடுக்கும் வடமாநிலங்களிலோ அல்லது இந்தி பேசும் மாநிலங்களிலோ சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி இருக்கலாம், ஆனால் வரலாறு அறிந்தவன் என்றுமே வரலாற்று தவறை செய்யமாட்டான் என்பதை மோடி அவர்கள் தெளிவாக இருக்கிறார்,
இந்தியாவில் தமிழகம்தான் சீனாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த வரலாற்றை நன்கு அறிந்து வைத்துள்ளார், பல்லவதேசமாகிய மாமல்லபுரத்தில் ஆசியக் கண்டத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்ற தலைவர்கள் சந்திப்பு நிகழ உள்ளது. இந்தியா-சீனா இடையே பல எல்லை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் இந்த சந்திப்பு நிகழ்வு தீர்த்து வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இருக்காது.
தமிழகத்தில் மோடி எதிர்ப்பு மாயை மிக தீவிரமாக கடைப்பிடிக்கும் திராவிட கட்சிகள் என்று சொல்லிக்கொள்ளும் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் இந்த சந்திப்பு நிகழ்வு மூலம் விழிபிதுங்கி நிற்கின்றனர், மோடி எதிர்ப்பு பிம்பத்தை தமிழகம் முழுவதும் உருவாக்கி தனது ஊடக பலம் மூலம் மோடி எதிர்ப்பு விஷத்தைக் கக்கிக் கொண்டிருக்கும் இக்கட்சிகளுக்கு மோடி அவர்கள் தனது பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடைபெறும் வர்த்தக போட்டியால் உலகம் முழுவதும் மிகப்பெரிய பொருளாதார சரிவை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லை பிரச்சினை விஸ்வரூபமெடுக்கும் நிலையில் தற்போது உள்ளது, இப்படிப்பட்ட வல்லரசு நாடுகள் பார்வை தற்போது இந்தியா மீது அதுவும் தமிழகம் மீதும் விழுந்துள்ளது தமிழினத்தின் பெருமையை இன்று உலக அளவில் பேசும் பொருளாக மாற்றிய பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழகம் மக்கள் என்றும் நன்றியை செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.
நாளை பிற்பகல் சென்னை வந்தடையும் சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கு கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் என பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளோடு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
இதனை தொடர்ந்து, விமான நிலையம் முதல் அவர் தங்கும் கிண்டி நட்சத்திர ஹோட்டல் வரை 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு, 6,800 பேர் வரவேற்பு அளிப்பார்கள். கல்லூரி மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் அதிமுகவினர், சாலையின் இருமருங்கிலும் காத்திருந்து மூவர்ணக் கொடியையும், சீன கொடியையும் அசைத்து உற்சாக வரவேற்பு அளிப்பார்கள். அதோடு, விமான நிலையம் முதல் கிண்டி நட்சத்திர ஹோட்டல் வரை செண்ட மேளம், கோவை டிரம்ஸ் மற்றும் வட இந்திய நாசிக் டோல் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கிண்டியில் உள்ள ஐடிசி ஹோட்டலில் சீன அதிபரை வரவேற்கும் வகையில், நுழைவு வாயிலில் வாழை மற்றும் கரும்பிலான பிரமாண்ட வளைவு அமைக்கப்பட்டுள்ளது. மாலையில் ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் வரை 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு தரைவழி மார்க்கமாக செல்லும்போது, சுமார் 50,000 பேர் வழிநெடுகிலும் வரவேற்பு அளிப்பார்கள்.
ஐடிசி ஹோட்டல் முன்பு பாரம்பரிய நாதஸ்வர கச்சேரியும், சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே கரகாட்டம் மற்றும் டிரம்ஸ் கலைநிகழ்ச்சியும் நடைபெறும். காந்தி மண்டபம் அருகே தப்பாட்டம் குழுவினரின் அசத்தலான கலைநிகழ்ச்சியும், மத்திய கைலாஷில் மதுரை கரகாட்டமும் அரங்கேறும். திருவான்மியூரில் செண்ட மேளக் கச்சேரி மூலம் சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதேபோல் கந்தன்சாவடி முதல் கோவளம் வரை பேண்ட் வாத்தியம் மற்றும் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
திருவிடந்தை பகுதியில் மயிலாட்டமும், புலிக்குகை பகுதியில் துடும்பாட்டமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரம் நுழைவு வாயிலில் நாதஸ்வரம் மற்றும் மதுரை கலைநிகழ்ச்சிகள் மூலம் சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது
மாமல்லபுரத்தில் பனை ஓலைகளால் ஆன வளைவும், அர்சுனன் தபசு பகுதியில் மலர்களால் ஆன வளைவும், ஐந்து ரத சாலையில் காய்கறிகளால் ஆன வளைவும் அமைக்கப்பட உள்ளன. தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது .
கடந்த காலங்களில் 1956 டிசம்பர் 5ம் தேதி அன்றைய சீனப் பிரதமர் சூஎன்லாய், இரண்டு நாள் பயணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அன்றைய சென்னை மாகாண ஆளுநராக ஸ்ரீபிரகாசாவும், காமராஜர் முதல்வராகவும் இருந்தனர். சென்னை மாநகராட்சி மைதானத்தில், இன்றைய நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அண்ணா மேம்பாலத்திற்கு கீழ், அன்றைக்கு இருந்த ஜெமினி படப்பிடிப்பு தளத்திற்கு சென்றார். அதன் அதிபர் எஸ்.எஸ்.வாசன், தொழிலாளர்களுடன் சீனப் பிரதமரை வரவேற்றார். அன்றைய ஆனந்த விகடனும் இதுகுறித்து விரிவாக எழுதியிருந்தது. ஜெமினி ஸ்டுடியோவில் சினிமா படப்பிடிப்பையும், நாட்டியப் பேரொளி நடிகை பத்மினி நாட்டிய, நடனத்தையும் கண்டுகளித்து சூஎன்லாய் வியந்தார்.
சீன பிரதமரை வரவேற்க தமிழகமும் தமிழக மக்களும் ஆவலுடன் இருக்கின்றனர்.