அடுத்த நோயை ரிலீஸ் செய்த சீனா..! கொரோனாவ விட ஆபத்தா? என்னங்க சொல்றீங்க!

0
109
#image_title

அடுத்த நோயை ரிலீஸ் செய்த சீனா..! கொரோனாவ விட ஆபத்தா? என்னங்க சொல்றீங்க!

சீனா என்றாலே நோயை பரப்பும் நாடு என்று அழைக்கும் அளவிற்கு அந்நாட்டில் டஜன் கணக்கில் நோயைகள் உருவாகி வருகிறது. இதற்கு அந்நாட்டின் உணவுமுறை மற்றும் டெக்னாலஜி என்ற பெயரில் புதிதாக எதையாவது ஒன்றை உருவாக்கி வருவதும் தான்.

மற்ற நாடுகளை காட்டிலும் சீனாவில் உணவு முறை ரொம்பவே மாறுபட்ட ஒன்றாக தான் இருக்கிறது. நாம் கண்டு அஞ்சும், அருவருக்கும் பிராணிகளை சமைக்காமலும் பாதி சமைத்தபடியும் உண்ணும் வழக்கம் கொண்டவர்களாக இருப்பதால் அவர்களுக்கு புது புது வைரஸ் நோய்கள் ஏற்படும் சூழல் எளிதில் உருவாகி விடுகிறது.

அதேபோல் சீனா மறைமுகமாக பயோ வார் நடத்தி வருகிறது என்றும் மேலை நாடுகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இதற்கு முக்கிய உதாரணம் கொரோனா வைரஸ். கடந்த 2019 ஆம் ஆண்டு உலக நாடுகளையே ஒரு ஆட்டம் காண வைத்து விட்டது. சீனாவில் ஊகான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் நாட்கள் செல்ல செல்ல உலகம் முழுவதும் பரவி 70 லட்சம் உயிர்களை காவு வாங்கியது. மக்கள் இதுவரை பார்த்திடாத பேரழிவாக இது இருந்தது. உலக நாடுகளின் பொருளாதாரம் சரிவை நோக்கி செல்ல தொடங்கியது.

தங்கள் நாட்டில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் குறித்து சீனா மேலை நாடுகளுக்கு சொல்லாமல் மூடி மறைக்க நினைத்ததே இந்த பேரழிவிற்கு காரணம் என்று உண்மை அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். வல்லரசு நாடான அமெரிக்கா, கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வுக் கூடம் ஒன்றில் இருந்து தான் பரவி இருக்கிறது. இவை தானாக உருவெடுத்த வைரஸ் அல்ல. உருவாக்கப்பட்ட வைரஸ் என்று சீனா மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியதும் அறிந்த ஒன்று தான்.

இவ்வாறு உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரஸ் தாக்கம் முழுமையாக நீங்க நிலையில் தற்பொழுது சீனாவில் நிமோனியா பாதிப்பு உருவாகி அந்நாட்டு மக்களை பதம் பார்த்து வருவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

சீனாவில் உள்ள பெய்ஜிங் மற்றும் லியோனிங் பகுதிகளில் தான் இந்த நிமோனியா பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் இதனால் மக்கள் மருத்துவமனைகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சுவாச நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சீனாவில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் மற்றும் சுவாச நோய்கள் பாதிப்பு ஆகியவற்றால் இந்தியாவுக்கு ஏற்படும் ஆபத்து மிகக் குறைவு. எதாவது சிக்கல் ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்க இந்தியா தயாராகவே உள்ளது” என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.