தலீபான்களுடன் சீனாஅதிபர்கள் திடீர் சந்திப்பு!

0
140
Chinese officials meet with Taliban

தலீபான்களுடன் சீனாஅதிபர்கள் திடீர் சந்திப்பு!

ஆப்கானிஸ்தானில் இருந்து தற்போது அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த ஆப்கானிஸ்தானுக்கு பாதுகாப்பாக அமெரிக்க படைகள் இருந்தது. ஆனால், அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதன் காரணமாக அவர்களை பைடன் வெளியேற உத்தரவு பிறப்பித்தார். எனவே அங்கு தலீபான்கள் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அதன் காரணமாக உலக நாடுகள் பலவும் தம் நாட்டு மக்களை மீட்டு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அங்கே நடைபெறும் சம்பவங்கள் அனைத்தையும் உலக நாடுகள் பார்த்துக் கொண்டு உள்ளது. இந்நிலையில் தலீபான்களுக்கு ஆதரவாக சீனா மற்றும் பாகிஸ்தான் நாட்டு அதிபர்கள் ஆதரவு கரம் நீட்டி உள்ளனர்.

அதன் காரணமாக அங்கு சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இருந்த போதிலும் ஆப்கானிஸ்தானிலிருந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிவிட வேண்டும் என்றும், இல்லையேல் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலிபான்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளுக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படலாம் எனவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் கத்தாரில் உள்ள தலிபான்களின் அரசியல் அலுவலகத்தின், துணை தலைவர் அப்துல் சலாம் ஹனாபி, ஆப்கானிஸ்தானுக்கான சீனத் தூதர் வாங் யூவை காபூலில் சந்தித்ததாக தலீபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த சந்திப்பில் அவர்களின் பாதுகாப்பு, இருதரப்பு உறவுகள், ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை மற்றும் சீனாவின் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.