சிரஞ்சீவியின் ‘போலா சங்கர்’ செப்டம்பர் 15 ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் – படக்குழு அறிவிப்பு!!

0
93
#image_title

சிரஞ்சீவியின் ‘போலா சங்கர்’ செப்டம்பர் 15 ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் – படக்குழு அறிவிப்பு!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் சிரஞ்சீவி.இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார்.இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 11 அன்று இவர் நடிப்பில் வெளியான ‘போலா சங்கர்’ திரைப்படம் வெளியானது.கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் ரீமேக் தான் இப்படம்.இந்த போலா சங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் கதாநாயகியாக தமன்னா நடித்துள்ளனர்.

ஏகே என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் துணை கதாபாத்திரங்களில் சுஷாந்த்,ரகுபாபு,முரளி சர்மா,ரவிசங்கர்,வெண்ணிலா கிஷோர்,துளசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் திரையங்குகளில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வெறும் 40 கோடி வசூல் செய்து தோல்வி படமாக உருவானது.

இந்நிலையில் தற்பொழுது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.அதன்படி வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் தெலுங்கு, தமிழ்,மலையாளம்,இந்தி,கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.