உலக அழகியுடன் ஜோடி சேர ஆசைப்பட்டு மொத்த மார்க்கெட்டையும் இழந்த ‘சாக்லேட் பாய்’ நடிகர்!!

0
92
#image_title

உலக அழகியுடன் ஜோடி சேர ஆசைப்பட்டு மொத்த மார்க்கெட்டையும் இழந்த ‘சாக்லேட் பாய்’ நடிகர்!!

திரையுலகை பொறுத்தவரை நடிகர்கள் தங்களுடன் நடிக்கும் நடிகை அழகாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கிளாமராக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். ஒரு சில நடிகர் எந்த நடிகைக்கு மார்க்கெட் இருக்கிறதோ அவருடன் நடிக்க ஆசைப்படுவார்கள். ஆனால் நடிகர்களை இவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட மாட்டோமா என்று ஏங்க வைத்த நடிகை நடிகை இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அந்த நடிகை முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அவர்கள் தான்.

இருவர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் ஒருவர் நடித்தால் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக தான் நடிப்பேன். இல்லையென்றால் இப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்துள்ளார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

கடந்த 2000 ஆம் ஆண்டில் இயக்குநர் ராஜிவ் மேனன் இயக்கத்தில் அஜித், தபு, ஐஸ்வர்யா ராய், மம்மூட்டி , அப்பாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை தபு நடித்திருப்பார். அஜித் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க டாப் ஸ்டார் என்று கொண்டாடப்பட்ட பிரசாந்த்திடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் பிரசண்ட அவர்கள் தன்னால் தபுவுக்கு ஜோடியாக நடிக்க முடியாது. இப்படத்தில் நடித்தால் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக தான் நடிப்பேன் என்று தெரிவித்ததால் வேறு வழி இன்றி அஜித்தை அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தார் இயக்குநர் ராஜிவ் மேனன்.

மேலும் இப்படத்தில் அஜித் – தபு ஜோடியின் காதல் இன்றளவும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஒருவேளை பிரசாந்த் இப்படத்தில் நடித்திடிருந்தால் அவரின் திரை வாழ்க்கையில் சறுக்கல் இல்லாமல் இருந்திருப்பர். இவரோ உலக அழகிக்கு ஆசைப்பட்டு தன் கேரியருக்கு ஆப்பு வைத்து கொண்டார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.