காக்க காக்க படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்!! எனக்கு வேண்டாம் என உதறியதற்கான காரணம்!!

0
103
Chosen who acted in Kakka Kakka!! The reason why I don't want it!!

2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வெளிவந்த காக்க காக்க படத்தில் ஹீரோவாக நடிகர் சூர்யா நடித்துள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான படத்தில் சூர்யாவிற்கு பதிலாக நடிகர் மாதவனை தான் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் மாதவன் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.

மாதவன் இப்படத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தை விளக்குகிறார் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்:-

நடிகர் மாதவன் இப்படத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தை இயக்குனர் வாசுதேவ் மேனன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். கௌதம் வாசுதேவ் மேனனும் நடிகர் மாதவனும் மின்னலே படத்தில் இணைந்த வேலை பார்த்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரிடையே நல்ல நட்பு வளர்ந்துள்ளது.

இதனால்தான், இரண்டாவது முறையாக இணைந்து வேலை பார்ப்போம் என காக்க காக்க படத்திற்காக கௌதம் வாசுதேவ் மேனன் அழைத்த பொழுது, அவரின் நன்மை கருதி மாதவன் வேண்டாம் என மறுத்துள்ளார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தன்னை வைத்து ஏற்கனவே படம் இயற்றியுள்ளதால், அவர் என்னும் உயரத்திற்கு செல்ல தன்னைவிட உயர்ந்த நடிகர்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் மாதவன் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்க இயக்கத்தில் நான் நடித்த படம் வெற்றி படமாக மாறிவிட்டது. இனி நீங்கள் புது புது கதாநாயகனை வைத்து பல வெற்றி படங்களை கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் உங்களது கதைக்கு யாரும் சரி வரவில்லை என்றால் நானே இப்படத்தில் நடிக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

மாதவன் ஒரு சாதாரணமான நடிகர் அல்ல. நல்ல ஒரு இன்டலிஜென்ட். மின்னலே, அலைபாயுதே படங்களில் பார்க்கலாம். எந்த மாதிரியான படங்களை நாம பண்ணனுங்கிற விஷயத்துல ரொம்ப தெளிவா இருக்கிறவர் என்று கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.