Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இயேசுபிரான் அவதரித்த தினம்! நள்ளிரவிலேயே களைகட்ட தொடங்கிய கிறிஸ்மஸ் பண்டிகை!

இயேசுபிரான் அவதரித்த தினம் கிறிஸ்துமஸ் தினமாக வருடம் தோறும் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் தினத்தன்று நள்ளிரவு முதலே கிறிஸ்துவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட தொடங்கிவிடுவார்கள்.

அந்த விதத்தில் இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று தமிழ்நாடு முழுவதும் தேவாலயங்களில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது தேவாலயங்களில் நள்ளிரவு முதலே கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்ய தொடங்கி விட்டார்கள்.

நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத வழிபாடுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக, தேவாலயங்களில் நோய்த்தொற்று பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ஆராதனை மற்றும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். உலகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.

எல்லா தேவாலயங்களிலும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கடைப்பிடித்தும்; பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக, கிறிஸ்மஸ் பண்டிகை உலகம் முழுவதும் மிக எளிமையாகவே கொண்டாடப்பட்டு வருகின்றது.

தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, சென்னை, தஞ்சாவூர், கோயமுத்தூர், புதுச்சேரி, என்று தமிழகம் முழுவதும் இருக்கின்ற தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியிருக்கிறது.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பனி மற்றும் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. இதில் பலர் குடும்பத்துடன் உற்சாகமாக பங்கேற்று வருகிறார்கள். கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டிருக்கின்றன.

Exit mobile version