தீராத மூட்டு வலி பிரச்சனையா!!! அந்த மூட்டுவலியை குணமாக்க இந்த மூன்று பொருள்கள் போதும்!!!
தீராத மூட்டுவலி பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் நபர்களுக்கு மூட்டு வலியை சரி செய்வதற்கு மூன்று பொருள்களை மட்டும் பயன்படுத்தி இந்த பதிவில் எளிமையான வீட்டு மருத்துவ முறைகளை செய்வது பற்றி தெரிந்து கொள்வோம்.
மூட்டு வலி என்பது தற்பொழுது எஅலாருக்கும் அதாவது வாலிபர்கள் முதல் வயதானவர்கள் முதல் ஏற்படுகின்றது. இந்த மூட்டு வலி பிரச்சனை என்பது தீராத பிரச்சனையாக இருக்கின்றது. இந்த தீராத பிரச்சனையான மூட்டு வலியை வெறும் மூன்றே பொருள்களை பயன்படுத்தி தீர்த்து விடலாம்.
மூட்டு வலியை குணமாக்கும் அந்த மூன்று பொருள்கள் கற்றாழை, கற்பூர எண்ணெய், மஞ்சள் ஆகும். இந்த மூன்று பொருள்களை மூட்டு வலியை குணமாக்க மருந்தாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம்.
கற்றாழையை எவ்வாறு மூட்டுவலியை குணமாக்க பயன்படுத்துவது…
கற்றாழை மருத்துவ குணங்கள் அதிமாக உள்ள ஒரு பொருள் ஆகும். இந்த கற்றாழை உடலில் ஏற்படும் சருமப் பிரச்சனைகள் முதல் பல வகையான பிரச்சனைகளை சரி செய்கின்றது. இந்த கற்றாழை முழங்கால் வலியையும் குணமாக்கும் ஆற்றல் கொண்டது.
மூட்டு வலியை குணமாக்க கற்றாழையில் இருந்து கற்றாழை ஜெல்லை எடுத்து முழங்கால் பகுதியில் தேய்த்து விட வேண்டும். அவ்வாறு தேய்த்து விடுவதால் கற்றாழை ஜெல் முழங்கால் வலியில் இருந்து நிவாரணம் தரும். மேலும் கற்றாழை ஜெல் குளிர்ச்சியை கொடுக்கும்.
கற்பூர எண்ணெயை எவ்வாறு மூட்டு வலிக்கு பயன்படுத்துவது…
மூட்டு வலி என்றால் கற்பூர எண்ணெயை நாம் மருந்தாக பயன்படுத்தலாம். மூட்டு வலியை குணமாக்கும் மருந்துகளில் முக்கியமான மருந்து கற்பூர எண்ணெய் ஆகும். இந்த கற்பூற எண்ணெயை சிறிதளவு எடுத்து அதில் தேங்காய் எண்ணெய் சிறிதளவு கலந்து அதை சூடாக்க வேண்டும். பின்னர் இந்த எண்ணெயை எடுத்து முழங்காலில் வலி உள்ள பக்கம் தேய்த்து மசாஜ் செய்தால் முழங்கால் வலி குணமாகும்.
மஞ்சளை எவ்வாறு மூட்டு வலிக்கு பயன்படுத்துவது…
மஞ்சள் மிகப்பெரிய கிருமி நாசினி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது. இந்த மஞ்சள் பொடியை நாம் காயத்திற்கு வைக்கும் பொழுது எந்த விதமான காயமும் ஆறிவிடும். இதனால் நாம் மஞ்சள் பொடியை மூட்டு வலியை குணமாக்க பயன்படுத்தலாம்.
அதற்கு கடுகு எண்ணெய் சிறிதளவு எடுத்து அதில் சிறிதளவு மஞ்சள் பொடியை சேர்த்து லேசாக சூடாக்கவும். எண்ணெய் சூடு ஆறிய பிறகு முழங்காலில் வலி உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். இதனால் சிறிது நேரத்திலேயே மூட்டு வலி குணமாகும்.